நாட்டின் முன்னணி IT தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), BSNL நிறுவனத்தின் 4ஜி மொபைல் நெட்வொர்க் விரிவாக்கப் பணிகளுக்காக ஒரு அட்வான்ஸ் பர்சேஸ் ஆர்டரைப் பெற்றுள்ளது. இதன் மதிப்பு ரூ.2,903 கோடி என்று மே 21-ஆம் தேதி நிறுவனத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்டரை அடுத்து டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை சற்று அதிகரித்து ரூ.3,503.20-ஐ எட்டியுள்ளது.
மே 21-ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்குவதற்கு முன்னதாக டிசிஎஸ் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் BSNL நிறுவனத்தின் 4ஜி மொபைல் நெட்வொர்க்கை 18,685 தளங்களில் நிறுவுதல் மற்றும் பராமரித்தல் போன்றவற்றுக்காக ஆர்டர் பெற்றுள்ளதாகத் தெரிவித்தது.

இதில் தேஜஸ் நெட்வொர்க் என்ற நிறுவனம் BSNL 4ஜி திட்டங்களுக்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக டிசிஎஸ் நிறுவனத்திடமிருந்து ஆர்டர் பெற்றுள்ளது. இந்தத் தகவலை தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் டிசிஎஸ் நிறுவனத்திற்கு ரேடியோ ஆக்சஸ் நெட்வொர்க் மற்றும் பிற உபகரணங்களை தேஜஸ் நெட்வொர்க்ஸ் வழங்கவுள்ளது. APO ஆர்டரில் குறிப்பிட்டுள்ளபடி சில நிபந்தனைகள் மற்றும் ஆவண வேலைகள் முடிந்த பிறகு, இந்த ஆர்டர் குறித்த கூடுதல் விவரங்கள் BSNL மூலம் வெளியிடப்படும் என்றும் டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை ஒப்பந்தத்தில் ஈடுபடுவது இது முதன்முறை அல்ல. ஏற்கனவே டிசிஎஸ் நிறுவனம் BSNL நிறுவனத்துடன் ரூ. 15,000 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் பணியாற்றி வருகிறது. இந்த ஒப்பந்தம் குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள டேட்டா மையங்கள் மற்றும் 4ஜி தளங்களை நிறுவுவதற்காகவும் எதிர்கால சேவைகளை மேம்படுத்துவதற்காகவும் போடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கே.கே.கிருத்திவாசன் சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார். அதன்படி பிஎஸ்என்எல் உடனான ஒப்பந்த பணிகள் 70 சதவீதம் வரை நிறைவடைந்து விட்டதாக கூறியிருந்தார்.
அதாவது ரூ.15,000 கோடி மதிப்பிலான மெகா ஒப்பந்தத்தின் மூலம் நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க் அமைப்பது மற்றும் டேட்டா மையங்களை நிறுவுவது போன்ற பணிகள் அனைத்தும் 70% வரை முடிந்து விட்டதாகக் கூறியிருந்தார். ஒரு நிறுவனம் பெரிய திட்டங்களின் இறுதி கட்டத்தை நெருங்கும் போது அதனால் நிறுவனத்திற்கு கிடைக்கக்கூடிய வருவாய் படிப்படியாக குறையத் தொடங்கும். இதனால் 2025-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் வருவாய் குறைவு ஏற்படும் என்று முன்பே கூறியிருந்தார். எனவே இது போன்ற ஒப்பந்தத்தால் ஏற்படும் வருவாய் குறைவை சரி செய்யும் வகையில் டிசிஎஸ் நிறுவனம் தற்போது புதிய வாய்ப்புகளைத் தேடி வருவதாகவும் கூறியிருந்தார்.
இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் சமீப நாட்களாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது. கடந்த 5 நாட்களில் 1 சதவீதம் வரை விலை சரிவு ஏற்பட்டது. கடந்த 1 மாதத்தில் நிறுவன பங்குகளின் விலை 6 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2025-ஆம் ஆண்டில் 14.5% அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் TCS நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 2 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 5.3% அதிகரித்து ரூ.64,479 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இந்த வருவாய் ரூ.61,237 கோடியாக இருந்தது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications