ஐடி ஊழியர்களே ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க.. டிசிஎஸ் நிறுவனத்தில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்..!

சென்னை: தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனம் தான் டாடா கன்சல்டன்சிஸ் சர்வீசஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம். இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 6,12,724 என அதிகரித்துள்ளது. அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்த நிறுவனம் புதிதாக 5,726 பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளது.

இதன் மூலம் 2025ஆம் நிதி ஆண்டின் முதல் இரண்டு காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் புதிதாக 11,000 ஊழியர்களை பணிக்கு அமர்த்தி இருப்பது தெரியவந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தை பொருத்தவரை 2024 ஆம் நிதி ஆண்டில் 13,249 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பினை வழங்கி இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கணிசமான எண்ணிக்கையில் புதிய நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.

 ஐடி ஊழியர்களே ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க.. டிசிஎஸ் நிறுவனத்தில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்..!

இது தொடர்பாக டிசிஎஸ் நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரி மிலிண்ட் லக்காட் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் டிசிஎஸ் நிறுவனம் 11,000 பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளது எனக் கூறியுள்ளார். திட்டமிட்டபடி கூடுதலான நபர்களை வேலைக்கு எடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து பணி உறுதி செய்யப்படும் எனக் கூறியுள்ளார். கடினமான தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையிலான திறமை வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவது தங்கள் நிறுவனத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பல்வேறு பிரிவுகளில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதும் அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2025 ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 40,000 ஃபிரஷர்களை பணிக்கு அமர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் உடனடியாக பயிற்சி வழங்கப்பட்டு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர் என்றும் டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 1.43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது முந்தைய காலாண்டை விட 1.59 சதவீதம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன் முறையாக டிசிஎஸ் நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் லாபத்தில் சரிவை சந்தித்து இருக்கிறது. அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் வருமானம் கடந்த காலாண்டை விட 2.2 சதவீதம் என உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் போது 6.38% என அதிகரித்துள்ளது.டிசிஎஸ் நிறுவனம் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தேவையான டேட்டா மையங்களை அமைக்கும் ஒப்பந்தத்தை பெற்று நாடு முழுவதும் அதற்கான பணிகளை மேற்கொண்டு இருக்கிறது. இதற்கான உபகரணங்களுக்கு அதிக தொகையை டிசிஎஸ் நிறுவனம் செலவிடுவதாக தெரிகிறது. இதுவே இந்த நிறுவனத்தின் லாபம் குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது .

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+