இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பை பேக் திட்டத்தினை இன்று தொடங்கியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் சமீபத்தில் அதன் பங்குதாரர்களுக்கு மூலதனத்தைத் திருப்பித் தர முடிவு செய்த நிலையில், 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை மீண்டும் வாங்க முடிவெடுத்திருந்தது.
இதற்காக இந்த நிறுவனத்தின் நிர்வாக குழுக் கூட்டத்தில் ஒரு பங்குக்கு 3000 ரூபாய் என்ற வகையில் 5.33,33,333 கோடி பங்குகளைத் திரும்ப வாங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
கடைசி தேதி என்ன?
இன்று தொடங்கியுள்ள இந்த பைபேக் திட்டம், ஜனவரி 1, 2021 வரையில் அமலில் இருக்கும் என இந்நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது வணிக வளர்ச்சிக்காக தொழில்நுட்ப பரிமாண வளர்ச்சி சுழற்சியைக் கையில் எடுக்கப்போவதாக அறிவித்திருந்த நிலையில், இந்த பைபேக் திட்டத்தினை அறிவித்திருந்ததது.
லாபம் தான்
முதல் கட்டமாக டிசிஎஸ் நிறுவனம் கிளவுட் தொழில்நுட்பத்தில் பவுண்டேஷன் அமைக்க உள்ளதாகவும் கூறியது. இது டிசிஎஸ் நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகப் பிரிவிற்குப் பயனுள்ளதாகவும், பல மடங்கு வளர்ச்சி செய்யவும் ஏதுவாக அமையும் என டிசிஎஸ் நிர்வாகம் கூறியுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி திட்டத்தினால், பங்குதாரர்களுக்கு நல்ல லாபமே. இந்நிலையில் பிஎஸ்இ-யில் இதன் பங்கு விலையானது இன்று கிட்டதட்ட 2% ஏற்றம் கண்டுள்ளது.
ஏற்றம் காணலாம்
டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த மார்ச் மாத குறைந்த விலையில் இருந்து, ஒப்பிடும்போது கிட்டதட்ட 90 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இது காலத்தில் எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் 80 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. அதோடு இந்த பங்கின் விலையானது இன்னும் ஒரு வருட காலத்தில் நல்ல ஏற்றம் காண வாய்ப்புள்ளது என கூறியுள்ளனர்.
52 வார உச்சம்
இதனால் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று அதன் 52 வார உச்சமான 2,893.60 ரூபாயினை தொட்டுள்ளது. இது 52 வார குறைந்தபட்ச விலை 1504 ரூபாயாகும். இது மார்ச் 13, 2020 அன்று தொட்டுள்ளது. இது உண்மையில் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.


Click it and Unblock the Notifications