இந்தியாவின் முன்னணி ஐடி துறையை சேர்ந்த ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் பங்கு விலை 1.3% அதிகரித்து, 2,948 ரூபாயாக அதிகரித்துள்ளது.
என்எஸ்இ-யில் இதன் சந்தை மூலதனம் 11.03 லட்சம் கோடி ரூபாயினை தொட்டுள்ளது.
இது இந்த நிறுவனம் இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஒப்பந்தங்களை, பெற்றுள்ள நிலையில் பங்குகள் சாதனை படைத்துள்ளன.
பங்கு விலை அதிகரிப்பு
இதே நிஃப்டி ஐடி இண்டெக்ஸ் அதன் எல்லா நேரத்திலும் இல்லாவிட்டாலும், உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த குறியீடு கடந்த வாரம், அதன் புதிய உயர்வை எட்டியது. இந்த வருடத்தில் இந்த பங்கின் விலை இந்த வருடத்தில் அதன் பங்கு விலை 35% அதிகரித்துள்ளது. இதே டிசம்பர் மாதத்தில் அதன் பங்கு விலை 7% அதிகரித்துள்ளது.
பங்கு கையகப்படுத்தல்
நவம்பர் 2020ல் டாய்ச் வங்கியின் போஸ்ட்பேங்க் சிஸ்டம்ஸ் ஏஜி வாங்குவதாக அறிவித்தது. இந்த ஒப்பந்தம் ஜெர்மனியில் டிசிஎஸ் அதன் திறனை வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த ஒப்பந்தத்தில் மூலம் போஸ்ட்பேங்க் சிஸ்டம்ஸ் ஏஜியின் 1500 ஊழியர்கள் டிசிஎஸ்க்கு மாற்றப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பை பேக் திட்டம்
சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனம் அதன் பை பேக் திட்டத்தினை அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பை பேக் திட்டத்தினை கடந்த டிசம்பர் 18 முதல் தொடங்கி உள்ளது. கடந்த டிசம்பர் 18ம் தேதி தொடங்கிய திட்டம், ஜனவரி 12, 2021ல் முடிவடையும் எனவும் , இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்கு விலை அதிகரிக்கும்
இதற்காக இந்த நிறுவனத்தின் நிர்வாக குழுக் கூட்டத்தில் ஒரு பங்குக்கு 3000 ரூபாய் என்ற வகையில் 5,33,33,333 கோடி பங்குகளைத் திரும்ப வாங்கத் தீர்மானித்தது. இதன் முதல் கட்டமாக, டிசிஎஸ் நிறுவனம் கிளவுட் தொழில்நுட்பத்தில் பவுண்டேஷன் அமைக்க உள்ளது. இது டிசிஎஸ் நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகப் பிரிவிற்குப் பயனுள்ளதாகவும், பல மடங்கு வளர்ச்சி செய்யவும் ஏதுவாக அமையும் என்றும் டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையும் 0.69% அதிகரித்து, 2,929.40 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications