டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நேற்று வெளியிட்ட காலாண்டு முடிவுகளின் தனது நிறுவனத்தின் மாற்று எதிர்கால திட்டத்திற்கான முதல் படியை அறிவித்தது. ஏஐ தொழில்நுட்பம் வந்த பின்பு பெரும்பாலான பணிகளை எளிதாகவும், வேகமாகவும் ஆட்டோமேட் செய்ய முடியும் என்பதால் பல பணியிடங்கள் தொடர்ந்து காலியாகி வருகிறது.
இப்படியிருக்கையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஏஐ துறையில் தன்னை மெருகேற்றி வரும் இந்த இடைவெளியில் அமெரிக்காவில் ஹெச்1பி விசா, அவுட்சேர்சிங் மீதான 25 சதவீத வரி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதை சமாளிக்கும் விதமாக இந்திய ஐடி நிறுவனங்கள் உள்நாட்டில் தனது வர்த்தகத்தை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

உள்நாட்டில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தாலும் ஜிசிசி என்ற ஒரு பிரச்சனை உள்ளது, இதனால் ஐடி சேவை என்ற வர்த்தகத்தை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்துவிட்டு மாற்று வர்த்தகத்திற்குள் நுழைய உள்ளது டிசிஎஸ்.
TCS நிறுவனம் தனது காலாண்டு முடிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, புதிதாக டேட்டா சென்டர் துறைக்குள் பெரிய அளவிலான முதலீட்டு உடன் நுழைய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுவரையில் இத்துறைக்குள் செல்லாத டிசிஎஸ் இந்தியாவில் டேட்டா லோக்கலைஷேன்-கான டிமாண்ட் அதிகரித்துள்ள வேளையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.
டிசிஎஸ் அறிவித்த திட்டத்தின் படி இந்தியாவில் 1 கிகவாட் (GW) திறன் கொண்ட டேட்டா சென்டர்களை அமைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்கு சுமார் ரூ.55,000 கோடி முதலீடு செய்ய உள்ளது TCS. மேலும் இந்த முதலீட்டை அடுத்த 5-7 ஆண்டுகளுக்குள் படிப்படியாக முதலீடு செய்து டேட்டா சென்டர் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நிலவரத்தின் படி இந்தியாவின் மொத்த டேட்டா சென்டர் துறை 1 கிகவாட் கீழ் உள்ளது.
டிசிஎஸ்-ன் இந்த திட்டம், AI (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகத் தர டேட்டா சென்டர்களை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட உள்ளது. இந்நிறுவனத்தின் கணிப்பின்படி, ஒவ்வொரு 150 மெகாவாட் (MW) திறனுக்கும் 1 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும், இதன் மூலம் 1 GW-க்கு 6.5 பில்லியன் டாலர் செலவாகும் என அறிவித்துள்ளது.
இந்த டேட்டா சென்டர் ஹைப்பர்ஸ்கேலர்கள், டீப்-டெக் நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் இந்திய வணிகங்கள் போன்றவற்றுக்கு சேவை செய்யும். மேலும் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ கே. கிருதிவாசன் கூறுகையில் 1GW இலக்கை 5-7 ஆண்டுகளுக்குள் படிப்படியாக அடைய திட்டமிட்டுள்ளோம் என்று முதலீட்டாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த திட்டம் மூலம், TCS-ஐ உலகின் மிகப்பெரிய AI-அடிப்படையிலான தொழில்நுட்ப சேவை நிறுவனமாக மாற்றும் பயணத்தின் ஒரு பகுதியாகும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டிசிஎஸ் இத்தகைய திறன் வாய்ந்த சேட்டா சென்டர் மூலம் தனது வாடிக்கையாளர்கள் டீப்-டெக், குவான்டம், பிளாக்செயின், ஏஐ என பல துறைகளில் புதிதாக சேவையை அளிக்கவும் வாய்ப்புள்ளது. இது கிட்டத்தட்ட டிசிஎஸ்-ன் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் டைப் முயற்சி.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications