இந்திய பொருளாதாரத்தை சக்கரத்தை, புதிய வேகத்தில் சுழல வைத்த பெருமை, ஐடி துறையையே சேரும். அதே போல இந்தியாவில் உற்பத்தி சார்ந்த தொழில்கள் அதிகரிப்பதற்கு முன்பே, சேவை சார்ந்த தொழில்கள் அதிகரிப்பதற்கும் ஐடி மற்றும் ஐடி சார்ந்த கம்பெனிகள் ஒரு முக்கிய காரணம் எனலாம்.
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி கம்பெனியான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இந்த ஆண்டும் கேம்பஸ் இண்டர்வியூ வைத்து, மாணவர்களை வேலைக்கு எடுக்கப் போகிறார்களாம்.
எத்தனை மாணவர்களை வேலைக்கு எடுக்கப் போகிறர்கள்? எப்போது தேர்வு? மாணவர்கள் எப்போது வேலையில் சேர இருக்கிறார்கள் என்பதை எல்லாம் இங்கு விரிவாகப் பார்ப்போம்.
கேம்பஸ் இண்டர்வியூ
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கம்பெனி, கேம்பஸ் இண்டர்வியூ வேலைகளைத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு சுமாராக 40,000 பேரை வேலைக்கு எடுத்தது டிசிஎஸ். இந்த ஆண்டுக்கான TCS National Qualifier Test (TNQT) அக்டோபரில் நடக்க இருக்கிறதாம். கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் வேலைக்கு மாணவர்களை எடுக்கப் போவதாக கம்பெனி தரப்பு சொல்லி இருக்கிறது.
17 - 20 ஆயிரம் பேர்
இந்த டிசம்பர் 2020 காலத்துக்குள், 17,000 - 20,000 மாணவர்கள், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்வார்கள் என எதிர்பார்பப்தாக, டிசிஎஸ் கம்பெனியின் மனித வள மேம்பாட்டு துறை தலைவர் மிலிந்த் லக்காட் (Milind Lakkad) சொல்லி இருக்கிறார். மேற்கொண்டு வேலைக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் மார்ச் 2021 மற்றும் ஜூன் 2021 காலாண்டில் கம்பெனியில் சேர்வார்களாம்.
உலக ஐடி நிலை
இந்த 2020-ம் ஆண்டில், உலக அளவில் ஐடி செலவீனங்கள் (IT Spending) 3.5 ட்ரில்லியன் டாலராக இருக்கலாம் என Gartner, Inc. என்கிற கம்பெனி கணித்து இருக்கிறது. இது கடந்த 2019-ம் ஆண்டில் செய்த ஐடி செலவீனங்களை விட7.3 சதவிகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற கம்பெனிகள்
உலகின் முன்னணி ஐடி கம்பெனிகளான ஐபிஎம், சேல்ஸ்ஃபோர்ஸ், அக்செஞ்சர், டெல் டெக்னாலஜீஸ் போன்ற பல கம்பெனிகள், தங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கத் தொடங்கி இருக்கிறார்கள் அல்லது ஆட் குறைப்புக்கான திட்டங்களைச் சொல்லி இருக்கிறார்கள் என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
தேவை இருக்கு
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கம்பெனியில், வியாபாரத்துக்கான டிமாண்ட் ( business requirement) அதிகமாக இருக்கிறது. எனவே ஆட்களையும் அதிகமாக எடுக்கிறோம். ஏற்கனவே, கடந்த 2 காலாண்டில், கம்பெனியில், 15,000 ஊழியர்களின் திறனை மேம்படுத்தி இருக்கிறோம் என டிசிஎஸ் கம்பெனியின் மனித வள மேம்பாட்டுத் துறையே சொல்கிறது.
வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது
சில மாதங்களுக்கு முன்பு, டிசிஎஸ் கம்பெனி, 2025-ம் ஆண்டுக்குள், தன் மொத்த 4.5 லட்சம் ஊழியர்களில், 75 சதவிகித ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்க வைக்கப் போவதாகச் சொல்லி இருந்தது. ஆனால் 4.5 லட்சம் ஊழியர்களை, அதே ஊக்கத்தோடு வைத்திருப்பது அத்தனை எளிதான காரியம் இல்லை என்பதையும் சொல்லி இருக்கிறது.
வேலை வாய்ப்புகள்
எப்படியோ, வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கும் இந்த நெருக்கடியான கால கட்டத்திலும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கம்பெனி, முன் வந்து மாணவர்களை கேம்பஸ் இண்டர்வியூ வைத்து வேலைக்கு எடுப்பது, இளைஞர்களுக்கு எல்லாம் வயிற்றில் பால் வார்த்தது போல இருக்கும். இப்படி மெல்ல மற்ற கம்பெனிகளும் வேலைக்கு ஆட்களை எடுக்கத் தொடங்கினால், பொருளாதாரமே மேம்பட்டுவிடும். விரைவில் உலக பொருளாதாரம் மேம்படும் என நம்புவோம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications