இந்தியாவில் பல கோடி மக்களின் வாழ்க்கையைப் பெரிய அளவில் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு வந்த ஐடி நிறுவனங்கள் கடந்த 2 வருடமாகப் புதிய வர்த்தகத்தைப் பெறுவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வந்தது. இதனால் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும் சரி, ஐடி துறையில் புதிதாகப் பணியில் சேருபவர்களும் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நிலைமை மாறி வருவதாகக் கூறப்பட்டாலும், சந்தையில் அதற்கான செயல்பாடுகள் தெரியாமல் இருந்தது ஐடி ஊழியர்களுக்குப் பெரும் கவலையாகவே இருந்தது. இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்திடம் இருந்து குட்நியூஸ் கிடைத்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் நிறுவனம் புதிதாகப் பின்லாந்து நாட்டின் Enento Group-க்கு டெக் சேவைகளும், உதவிகளையும் செய்ய இன்று முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
Enento Group என்பது பின்லாந்து நாட்டில் இயங்கி வரும் டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் நுகர்வோர் தகவல் நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு, டிசிஎஸ் நிறுவனம் ஐடி அப்பிளிகேஷன், கிளவுட், டிஜிட்டல் வொர்க்பிளேஸ், ஐடி செக்யூரிட்டி போன்ற முக்கியமான சேவைகளை வழங்க உள்ளது.
டிசிஎஸ் அளிக்கும் இந்தச் சேவை மூலம் Enento Group-ன் சேவை தரம், பணியாளர்களின் செயல்திறன், பாதுகாப்பு, 24 மணிநேரமும் இயங்கும் கட்டமைப்பை உருவாக்குவதோடு, இக்குழுமத்தின் செலவுகளைப் பெரிய அளவில் குறைக்க உள்ளது.
Enento Group உடனான வர்த்தகம் மூலம் டிசிஎஸ், வட ஐரோப்பியப் பகுதிகளில் தனது வர்த்தகத்தையும், இருப்பிடத்தையும் வலிமைப்படுத்த உள்ளது. இதன் மூலம் புதிதாகப் பல வர்த்தகத்தையும் கூட்டணியையும் டிசிஎஸ் உருவாக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த வாரம் டிசிஎஸ் நிறுவனம், Europ Assistance நிறுவனத்தின் ஐடி ஆப்ரேட்டிங் மாடலை செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் வைத்து மேம்படுத்தும் மாபெரும் திட்டத்தைப் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் Europ Assistance மற்றும் டிசிஎஸ் மத்தியில் பாரீஸ் நகரில் நடந்தது.
TCS 1991 ஆம் ஆண்டு முதல் நோர்டிக் பிராந்தியத்தில் உள்ளது, இந்நிறுவனத்தில் 20,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஸ்வீடன், பின்லாந்து, நார்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு ஐடி மற்றும் டெக் சேவைகளைப் பெற்று வருகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications