இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப (IT) சேவை, ஆலோசனை மற்றும் வணிகத் தீர்வுகள் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) என்பது விளங்கி வருகிறது. இந்நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் பெங்களூருவில் மிகப்பெரிய வணிக அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. சத்வா நாலெட்ஜ் பாயிண்ட் என்ற கட்டிடத்தில் சுமார் 17.52 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட அலுவலக இடத்தை, 5 ஆண்டுகளுக்கு சுமார் ரூ.975 கோடி வாடகைக்கு எடுத்துள்ளதாக Propstack மூலம் பெறப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தத்தின்படி, TCS நிறுவனம் அங்குள்ள 'டவர் ஏ' மற்றும் 'டவர் பி' ஆகிய இரண்டு கோபுரங்களில் மூன்று தளங்களை குத்தகைக்கு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கான மாத வாடகை சுமார் ரூ.15.37 கோடி ஆகும். அதாவது, ஒரு சதுர அடிக்கு ரூ.87.73 என்ற விகிதத்தில் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனம் ரூ.25 கோடி வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது. இந்த குத்தகை ஒப்பந்தத்தில், ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் பிறகு 14% வாடகையை அதிகரிக்கும் விதிமுறையும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய குத்தகை ஒப்பந்தம் : இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய Propstack நிறுவனத்தின் இணை நிறுவனர் ராஜா சீதாராமன், "இந்த ஆண்டு பல முக்கிய ஐடி துறை குத்தகைகள் நடந்தபோதும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட்-இன் இந்த ஒப்பந்தம் பரப்பளவு (1.75 மில்லியன் சதுர அடி) மற்றும் வருடாந்திர வாடகை அடிப்படையில் பெங்களூருவின் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாக உள்ளது.
ஒரு முன்னணி ஐடி நிறுவனம் பிரீமியம் கட்டிடத்தில் இவ்வளவு பெரிய குத்தகையை எடுத்திருப்பது, பெங்களூரு இந்தியாவின் விருப்பமான ஐடி மையமாக தொடர்கிறது என்பதை வலுப்படுத்துகிறது" என்று கூறினார்.
முந்தைய பெங்களூரு ஒப்பந்தம்: டிசிஎஸ் நிறுவனம் இதற்கு முன், எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள 360 பிசினஸ் பார்க்கில் 1.4 மில்லியன் சதுர அடி இடத்தை 15 ஆண்டுகளுக்கு ரூ.2,130 கோடிக்கு குத்தகைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மற்றும் ஹைதராபாத்: கடந்த மார்ச் மாதம், டிசிஎஸ் சென்னையில் உள்ள ஓசோன் டெக்னோ பார்க்கில் 6.3 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை மாதத்திற்கு ரூ.2.8 கோடி வாடகைக்கு எடுத்தது. அதேபோல், ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தின் நிதி மாவட்டத்தில் 10.18 லட்சம் சதுர அடி இடத்தை மாதத்திற்கு ரூ.4.3 கோடி வாடகைக்கு எடுத்தது.
வரும் நிதியாண்டில் டிசிஎஸ் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை 2% (சுமார் 12,000 ஊழியர்களுக்கு மேல்) குறைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில், இந்த மெகா குத்தகை ஒப்பந்தங்கள் இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் அதன் நிலைத்தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications