இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் தனது மொத்த கவனத்தையும் கிளவுட் சேவையை விரிவாக்கும் திட்டத்தில் செலுத்தி வருகிறது, அடுத்த சில வருடத்தில் தற்போது பெறும் கிளவுட் சேவை வர்த்தகத்தை இரட்டிப்பாக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான பணிகளை வேகமாகச் செய்து வருகிறது.
ஒட்டுமொத்த டெக் உலகமும் கிளவுட் சேவையை நோக்கிப் பயணித்து வரும் நிலையில், டிசிஎஸ் இத்துறை சார்ந்த வர்த்தகத்தை மற்ற இந்திய நிறுவனங்களை விடவும் அதிகளவில் பெற வேண்டும் என்பதற்காகக் கிளவுட் சேவைக்கென பிரத்தியேக குழுவை உருவாக்கத் திட்டமிட்டு, அதற்கான பணியில் இறங்கியுள்ளது டிசிஎஸ்.
இதனால் அடுத்த சில வருடத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் கிளவுட் சேவை சார்ந்த வர்த்தகத்தையும், லாபத்தைத் தனிப்பட்ட முறையில் கவனிக்க வேண்டிய நிலை உருவாகும். இன்றைய நிலையில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகளவிலான வர்த்தகம் மற்றும் வருமானத்தைத் தருவது BFSI பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
5 பிரிவு, 5 தலைவர்கள்
டிசிஎஸ் நிறுவனம் கிளவுட் சேவை வர்த்தகத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ள காரணத்தால் மிகப்பெரிய இலக்குடன் பயணிக்கத் துவங்கியுள்ளது. இதனால் ஆரம்பத்திலேயே இப்பிரிவு வர்த்தகத்தைச் சீரமைப்பும் நோக்குடன் அதிகளவிலான வருமானத்தைப் பெற வேண்டுமெனக் கிளவுட் சேவை பிரிவை 5 பிரிவுகளாகப் பிரித்துள்ளது.
இதனால் ஒவ்வொரு பிரிவையும் தனிப்பட்ட முறையில் கவனித்து வர்த்தகம் மற்றும் சேவை திறனை மேம்படுத்த முடியும் என்பது டிசிஎஸ் திட்டம்.
5 தலைவர்கள்
கிளவுட் சேவையின் கீழ் அமேசான் வெப் சர்வீசஸ், கூகிள், அசூர், டிசிஎஸ்-ன் தனிப்பட்ட கிளவுட் சேவை பிரிவு, கிளவுட் கண்சல்டிங் பிரிவு என 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 5 பிரிவுகளுக்குத் தனிப்பட்ட துணை தலைவர் (Vice President) தலைமை தாங்குவார்கள், இவர்கள் தான் இப்பிரிவின் வருமான மற்றும் வர்த்தகத்திற்குப் பொறுப்பு என டிசிஎஸ் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப சேவைகள பிரிவின் தவைவர் கிருஷ்ணன் ராமானுஜம் தெரிவித்துள்ளார்.
7 வருட பயணம்
டிசிஎஸ் நிறுவனம் கடந்த 7 வருடமாகக் கிளவுட் சேவைகளை அளித்து வந்தாலும், தற்போது கிளவுட் சேவையே நிறுவனத்தின் முக்கிய இலக்காக மாறியுள்ளது. எனவே இனி வரும் காலத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் கிளவுட் சேவை மற்றும் வர்த்தகத்தில் கிடைக்கும் வருமானம் மற்றும் லாப அளவீடுகள் டிசிஎஸ்-ன் மொத்த வருமானத்தில் முக்கிய இடத்தைப் பெறும்.
போட்டி நிறுவனங்கள்
டிசிஎஸ் நிறுவனத்தைப் போலவே இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் கிளவுட் சேவை மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் கிளவுட் சேவைக்கு ஈடுக்கொடுக்க இன்போசிஸ் தனது கிளவுட் சேவை வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய சிம்பிளஸ், கைய்டுவிஷன், ப்ளூ ஆகார்ன் ஆகிய நிறுவனங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications