இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஏற்கனவே புதிய வர்த்தகங்கள் கிடைக்காமல் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில், பல உயர் அதிகாரிகள் போட்டி நிறுவனத்தில் உயர் பதவிகளிலும், உயர் பொறுப்புகளிலும், அதிகச் சம்பளத்துடன் சேர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களும் காக்னிசென்ட் நிறுவனம் தங்களுடைய நிறுவன ஊழியர்களை டார்கெட் செய்து ஈர்த்து வருவதாக விமர்சனம் செய்தது. இதைத் தொடர்ந்து காக்னிசென்ட் நிறுவனத்தில் சேர்ந்த ஊழியர்கள் மீது ஒப்பந்தத்தை மீறி இணைந்துள்ளதாகக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் தற்போது டிசிஎஸ் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனால் இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து வெளியேறிய பிரச்சனை தற்போது டிசிஎஸ் நிறுவனத்திலும் வெடித்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிசிஸ் நிறுவனத்தின் உயர் துணை தலைவர் மற்றும் பார்ட்னர் எகோசிஸ்டம்ஸ் & கூட்டணிகள் பிரிவின் உலகளாவிய தலைவரான தீனாநாத் கோல்கர் தனது பதவி மற்றும் பணியை ராஜினாமா செய்துள்ளார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் 34 ஆண்டுக்கால நீண்ட பணிக்காலத்திற்குப் பிறகு நிறுவனத்தை விட்டு வெளியேறினார் தீனாநாத் கோல்கர். இவர் 1996 இல் TCS இல் டேட்டா வேர்ஹவுசிங் மற்றும் டேட்டா மைனிங் குழுவைத் தொடங்கினார். இந்தக் குழு தான் பின்னாளில் business intelligence நடைமுறையாக மாறியது.
தீனாநாத் கோல்கர் அவர் TCS eServe நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார், இதைத் தொடர்ந்து BFSI BPO இன் தலைவராகவும் பதவிகளில் பணியாற்றினார். அவர் 2017-22 காலகட்டத்தில் அனலிட்டிங்க்ஸ் மற்றும் இன்டலிஜென்ஸ் பிரிவின் உலகளாவிய தலைவராகவும் உயர்ந்தார்.
34 வருடம் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தீனாநாத் கோல்கர் தனது லிங்க்ட்இன் பதிவில் உருவாக்கமான பல ஆண்டுகளாக TCSல் சிறந்த தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன் பணியாற்றியும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. நான் பணிபுரிந்த ஒவ்வொரு குழுவும் சிறப்பானது, இந்த 34 வருட பணியில் பல சிறந்த நினைவுகள் உள்ளது எனத் தெரிவித்தார்.
தீனாநாத் கோல்கர் பதவியில் ராஜீவ் ராய் என்பவர் பார்ட்னர் எகோசிஸ்டம்ஸ் & கூட்டணிகள் பிரிவின் உலகளாவிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications