டெக் உலகில் தற்போது முக்கியப் பேசுபொருளாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI பல துறை சார்ந்த ஊழியர்கள் தங்களுடைய வேலையை இழக்க முக்கியக் காரணமாக இருக்கும் எனப் பீதி ஏற்படுத்தி வரும் வேளையில், ஐடி துறை ஊழியர்களுக்கே இதனால் பாதிப்பு உள்ளது கூறப்படுவது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது.
சந்தையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த திறன் வாய்ந்த ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தால் இந்திய ஐடி துறை நிறுவனங்களால் இத்துறையில் அதிகப்படியான திட்டங்களைப் பெற முடியாமல் உள்ளதும் முக்கியப் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் தனது 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு, டெக் துறையில் வேகமாக வளர்ந்து வரும் ஜெனரேட்டிவ் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Gen AI) துறையில் பணியாற்ற வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் 5 லட்சத்திற்கும் அதிகமாகச் சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு ஏஐ துறையில் பணியாற்றப் பயிற்சி அளிக்கப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டிசிஎஸ் நிறுவனத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை டிசம்பர் 31 ஆம் தேதி முடிவில் 603,305 உள்ளது.
டிசிஎஸ் நிர்வாகம் வணிக வாய்ப்பாக, ஜெனரேட்டிவ் AI இப்போது அதன் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது, இதேவேளையில் அதன் பயன்பாட்டு இடங்கள் சிறியதாக உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் மிகப்பெரிய முக்கியமான துறையாக இருக்கும் என டிசிஎஸ் நிறுவனத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட AI.Cloud பிரிவின் தலைவர் சிவ கணேசன் தெரிவித்தார்.
டிசிஎஸ் நிறுவனம் தற்போது 250 ஜெனரேட்டிவ் AI திட்டங்களில் பணியாற்றி வருவது குறித்துச் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. ஏஐ மூலம் வாடிக்கையாளர்களுக்கான தற்போதைய பணிகளை விரைவாகச் செய்வதற்கு Gen AI நுண்ணறிவையும் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார் சிவ கணேசன்.
AI தேவைகளுக்கு எதிர்காலத்தில் அதிகப்படியான தேவை இருக்கும் நிலையில், டிசிஎஸ் தற்போது முதலீட்டில் இறங்கியுள்ளது. இந்தப் பயணத்தில் முதன்மையாகப் பணியாளர்களை AI திறன்களுடன் தயார்ப்படுத்துகிறது மற்றும் சரியான நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்கிறது இயக்குவது முதற்கட்ட பணியாக உள்ளது எனவும் டிசிஎஸ் AI.Cloud பிரிவின் தலைவர் சிவ கணேசன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications