சென்னையில் TCS மெகா திட்டம்.. கூடவே 3 நிறுவனம் வந்திருக்கே.. வாவ்..!!

இந்தியாவின் முன்னணி வர்த்தக நகரமாக இருக்கும் சென்னை, அடுத்த தலைமுறை வளர்ச்சிக்குத் தயாராகி வரும் வேளையில் அடுத்தடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தனது அலுவலகத்தைத் திறந்து வருகிறது.

இதனால் சென்னையில் கமர்சியல் ரியல் எஸ்டேட் துறை மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சென்னையின் 4 திசைகளிலும் டெக் பார்க்குகள், அலுவலக கட்டிடங்கள் என தொடர்ந்து கட்டப்பட்டு வரும் வேளையில் முன்னணி திட்டங்களில் கட்டுமான பணிகள் முடிவதற்கு முன்பாகவே புக் செய்யப்பட்டு வருகிறது

சென்னையில் TCS மெகா திட்டம்.. கூடவே 3 நிறுவனம் வந்திருக்கே.. வாவ்..!!

சென்னையில் அலுவலக இட வாடகை சந்தை பரபரப்பாக இருக்கும் வேளையில், IT நிறுவனங்கள் புதிய அலுவலக இடங்களை வாடகைக்கு எடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதன் மூலம் நகரத்தில் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

TCS: நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சென்னை ஒன் SEZ இல் சுமார் 125,000 சதுர அடி அலுவலக இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளது. இந்த அலுவலகத்தில் சுமார் 1800 புதிய பணியாளர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், சிறுசேரியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் 2ஆம் கட்ட கட்டுமான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இதற்கிடையில் சென்னை ஒன் SEZ அலுவலகத்தைத் திறக்க உள்ளது. காக்னிசென்ட் நிறுவனம் தனது பணியாளர் எண்ணிக்கையைக் குறைத்து அலுவலகத்தை காலி செய்து வரும் வேளையில், சென்னையில் ஐடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் TCS நிறுவனம் முன்னணி நிறுவனமாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thryve Health: TRIL இல் சுமார் 73,000 சதுர அடி அலுவலக இடத்தை வாடகைக்கு எடுத்துள்ள Thryve Health நிறுவனம், இதன் மூலம் இந்த புதிய இடத்தில் சுமார் 850 புதிய பணியாளர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.

Hexaware: பிரபல ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனமான ஹெக்சாவேர் சென்னையில் Featherlite the Address இல் 65,000 சதுர அடி அலுவலக இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளது.

ACL Digital: DLF Cybercity இல் 54,000 சதுர அடி அலுவலக இடத்தை வாடகைக்கு எடுத்துள்ள ACL Digital நிறுவனமும் தனது அலுவலகத்தைச் சென்னையில் விரிவாக்கம் செய்துள்ளது. இந்த 4 நிறுவனங்களும் சமீபத்தில் சென்னையில் தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்த நிறுவனமாகும்.

சென்னையில் IT துறையின் வளர்ச்சியும், வெளிநாட்டு நிறுவனங்கள் அடுத்தடுத்து தனது கடையை விரிவாக்கம் காரணத்தால் சிங்கார சென்னையில் அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு, மக்களின் பணிபுரியும் இடங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு, ஹைப்ரிட் மாடல் வந்து தற்போது இயல்பு நிலைக்கு மாறி வருகிறது. இவ்விரண்டின் காரணமாக சென்னையில் அலுவலக இடத்திற்கான டிமாண்ட் அதிகரித்து வருகிறது.

புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வருவதும், சென்னையில் ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் விரிவடைவதும் அலுவலக இட வாடகை சந்தையைச் சூடுபிடிக்க வைத்துள்ளது. இதனால் சென்னையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, ரியல் எஸ்டேட் துறையும் செழிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+