இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் மந்தமான பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் பல சவால்களை எதிர்கொண்டாலும் தொடர்ந்து வர்த்தகம் வளர்ச்சி பாதையில் இருப்பதாகவும், வழக்கம் போல் புதிய ஊழியர்களை பணியில் சேரக்க உள்ளதாக அறிவித்து ஐடி ஊழியர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது. ஆனால் மறுமுனையில் அக்சென்சர் 19000 ஊழியர்களையும், காக்னிசன்ட் நிறுவனம் 3500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் ChatGPT-க்கு இணையான ஒரு AI Genarative தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை enterprise code generation-க்காக பயன்படுத்த உள்ளதாக டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரியான என் கணபதி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இப்புதிய ப்ராஜெக்ட் மிகவும் ஆரம்பக்கட்டத்தில் தான் உள்ளது, இதை டிசிஎஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய இன்டர்னல் கோடு, டேட்டா, ரிசோர்ஸ்-க்கு பயன்படுத்த முடியுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இந்த புதிய தொழில்நுட்பம் மொத்தமாக சொந்த ஆல்காரிதம் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த தொழில்நுட்படத்தின் அடிப்படையே large language model தான், தற்போது ChatGPT போன்ற பல்வேறு generative AI chatbot இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை enterprise code generation-க்காக பயன்படுத்த உள்ளதாக டிசிஎஸ் சிஓஓ தெரிவித்துள்ளார்.
டிசிஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் டிசிஎஸ் நிலைப்பாடும், இதன் திட்டமும் என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்தார் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான கணபதி சுப்பிரமணியம்.
செயற்கை நுண்ணறிவு என்பது புதியது அல்ல, எனக்கு தெரிந்து நாங்கள் 1990 களில் இருந்து இதில் பணியாற்றி வருகிறோம். இப்போது இப்பிரிவு வேகமாக வளர்ந்தும், முதிர்ச்சி அடைந்து எல்லோரும் பயன்படுத்தும் ஒன்றாக மாறியுள்ளது.

முன்பு பெரிய நிறுவனங்களில் உயர் தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி வந்த செயற்கை நுண்ணறிவு, இப்போது நீங்க, நான், என் குழந்தைகள் வரையில் எல்லோரும் பயன்படுத்தும் அளவிற்கு மாறியுள்ளது. இது மட்டும் அல்லாமல் தற்போது செயற்கை நுண்ணறிவு என்பது ஐடி ஊழியர்களை காட்டிலும் திறன் கொண்டதாக மாறியுள்ளது என்றும் சிஓஓ கணபதி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய பல ப்ராடெக்-ல் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வருகிறோம், உதாரணமாக TCS BaNCS தளத்தில் 90 சதவீத code ப்ராம்ட் மூலம் செய்துள்ளது. எங்களுடைய ஐடி ஊழியர்கள் உயர்தர specifications கொடுத்து உயர் தர ப்ராம்ட் மூலம் code உருவாக்கியுள்ளனர் என தெரிவித்தார். டிசிஎஸ் நிறுவனத்திற்கு AI ஒன்றும் புதியது இல்லை என தெரிவித்தார்.

டிசிஎஸ் நிறுவனத்தில் அதிக அனுபவம் கொண்ட என் கணபதி சுப்பிரமணியம் தனது தலைமை இயக்க அதிகாரி (சிஓஓ) பதவியில் இருந்து மே 2024 இல் ஓய்வு பெறுவதால், டிசிஎஸ் நிறுவன வளர்ச்சி வணிகத்தின் தலைவரான கிருஷ்ணன் ராமானுஜம் இப்பதவிக்கு போட்டி போடுபவர்களில் முன்னணியில் உள்ளார்.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

தோசை, பிரியாணிய விட்டுத் தள்ளுங்க: AI வளர்ச்சியையும் பதம்பார்க்கும் ஈரான் பிரச்சனை? எப்படி?

16,000 பேரின் வேலை காலி.. மெட்டா நிறுவன சிஇஓ மார்க்-ஐ திட்டி தீர்க்கும் ஊழியர்கள்..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications