இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சி சமீபகாலமாக மந்தமாக உள்ளது. இது வெறும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் மட்டும் அல்ல, இரண்டு முக்கிய கட்டமைப்பு மாற்றங்களால் ஏற்படுவதாக எம்கே குளோபல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நீரவ் ஷேத் கூறியுள்ளார். அவை, குளோபல் கேபபிலிட்டி சென்டர்கள் (GCCs) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் வளர்ச்சியாகும்.
ஐடி நிறுவனங்களின் வேலைகளை, நிறுவனங்களின் சொந்த தொழில்நுட்ப மையங்களான ஜிசிசிக்கள் நேரடியாக போட்டியிட்டுப் பெறுகின்றன. ஒரு ஆய்வின்படி, சுமார் 65% நிறுவனங்கள், தங்கள் ஐடி சேவைகளின் 10% வரை ஜிசிசிக்களுக்கு மாற்றி வருகின்றன. குறிப்பாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் ஏஐ சார்ந்த திட்டங்களில் இந்த மாற்றம் அதிகமாக உள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டில் ஜிசிசிக்களின் வருவாய் கிட்டத்தட்ட 40% அதிகரித்துள்ள நிலையில், இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலை, ஐடி நிறுவனங்களின் வாடிக்கையாளர் பணிகளை, அந்த நிறுவனங்களின் சொந்த ஜிசிசிக்கள் பிரித்துக் கொள்கின்றன என்பதைக் காட்டுகிறது.
அடுத்ததாக, செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ, இரண்டாவது முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது. ஜெனரேட்டிவ் ஏஐ, மென்பொருள் குறியீடுகளை உருவாக்கும் திறனை 10% முதல் 50% வரை மேம்படுத்துவதால், மென்பொருள் எழுதுவதற்கான செலவு குறைந்து வருகிறது. இது ஐடி நிறுவனங்களுக்கு, தங்களின் சேவைகளின் விலை குறைந்து, வருவாய் தேக்கநிலைக்கு வழிவகுக்கும்.
ஏஐ-யின் வருகை, ஐடி துறையின் வேலைவாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் எனவும், ஏற்கனவே இந்த துறை உச்சகட்ட வேலைவாய்ப்பில் இருக்கலாம் எனவும் ஷேத் கூறியுள்ளார். மேலும், ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நேரியல் தன்மை கொண்டதல்ல. அதாவது, எந்த நேரத்திலும் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு, தற்போதுள்ள முழு வேலைகளையும் பயனற்றதாக ஆக்கக்கூடும். உதாரணமாக, ஒரு புதிய ஏஐ மாடல் உருவாகும்போது, அது சட்ட நிறுவனங்கள் அல்லது தயாரிப்பு நிறுவனங்களின் வணிக மாதிரியை ஒரே இரவில் மாற்றியமைக்கும்.
கொரோனா பெருந்தொற்று முன் முதல் 3 இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாய் ஆண்டுக்கு சராசரியாக 10% நிலையான நாணய மதிப்பில் வளர்ந்தது. ஆனால், 2024-2025ஆம் நிதியாண்டில், இந்த வளர்ச்சி 3 முதல் 4% ஆக குறைந்துள்ளது. இது உலக பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்த போதிலும் நிகழ்ந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் வலுவாக இருந்தபோதிலும், இந்திய ஐடி நிறுவனங்களின் அமெரிக்க வருவாய் 1% மட்டுமே வளர்ந்துள்ளது.
இது, ஐடி துறையின் மந்தநிலைக்கு, உலகளாவிய பொருளாதார நெருக்கடியை மட்டும் காரணம் கூறுவது தவறானது என்பதை காட்டுகிறது. அதற்கு மாறாக, ஜிசிசி மற்றும் ஏஐயின் தாக்கம் தான் முக்கிய காரணங்கள் என ஷேத் எச்சரித்துள்ளார். இறுதியாக, தொழில்நுட்ப முதலீடு குறித்த ஒரு புத்தகத்தை பரிந்துரைத்த ஷேத், புதிய தொழில்நுட்பங்கள் தொடக்கத்தில் மூலதன பற்றாக்குறையை சந்தித்து, பிறகு உபரி மூலதனத்தை பெறும். அதில் வெற்றியாளர்களை கண்டறிவதை விட, தோல்வியாளர்களை கண்டறிவது மிகவும் எளிது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications