மும்பை: டிசிஎஸ் நிறுவனம் நடப்பாண்டில் கல்லூரி இறுதியாண்டு படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சிஸ் சர்வீசஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு படிப்பை முடிக்கும் இளைஞர்களை பணிக்கு அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸில் பணி செய்வது என்பது பலரது கனவாக இருக்கும். அந்த கனவை நிறைவேற்றும் வாய்ப்பு தான் தற்போது கிடைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மேற்படிப்பை முடிக்கும் மாணவர்களை புதிதாக பணிக்கு அமர்த்த உள்ளதாக டிசிஎஸ் அறிவித்துள்ளது.

இதன்படி 2024ஆம் ஆண்டில் பி டெக், பிஇ, எம்சிஏ, எம்எஸ்சி மற்றும் எம்எஸ் உள்ளிட்ட துறைகளில் படிப்பை முடிக்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற உள்ளது.
மாணவர்கள் டிசிஎஸ் இணையதளத்திற்கு சென்று careers பிரிவில் விண்ணப்பம் செய்யலாம். இதில் மாணவர்களுக்கு நேஷ்னல் குவாலிஃபயர் தேர்வு நடத்தப்படும். தேர்வின் அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்காக விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 10ஆம் தேதி கடைசி நாள் என்றும், ஏப்ரல் 26ஆம் தேதி விண்ணப்பங்கள் சரிபார்த்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிசிஎஸ் நிறுவனம் நிஞ்சா, டிஜிட்டல் மற்றும் பிரைம் ஆகிய மூன்று பிரிவுகளுக்கு ஆட்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. நிஞ்சா பிரிவில் பணியில் சேரும் ஊழியர்களுக்கு ஆண்டு ஊதியம் 3.36 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பிரிவில் வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 7 லட்சம் ரூபாயும், பிரைம் பிரிவில் 9 முதல் 11.5 லட்சம் ரூபாயும் என ஆண்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணிக்கை எதுவும் வெளியாகவில்லை. எனினும், 2023- 24ஆம் நிதி ஆண்டில் டிசிஎஸ் 40,000 பேரை புதிதாக பணியில் சேர்க்க இலக்கு வைத்திருந்தது.
டிசிஎஸ் நிறுவனம் தனது பிசினஸ் பிராசசிங் பிரிவிலும் மாணவர்களை தேர்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு கலை மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்கள், வணிகவியல் பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் பணிக்கு அமர்த்த உள்ளது இவர்கள் ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் டிசிஎஸ் இணையதளத்தில் செய்து உரிய விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications