இந்தியாவின் முன்னணி IT தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் 2025-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், 5,452 பேரையும் 2-ஆம் காலாண்டில் 5,726 பேரையும் வேலைக்கு எடுத்துள்ளது. கடந்த காலாண்டின் தொடர்ச்சியாக இந்த முறையும் பணியமர்த்தலைத் தொடர்ந்துள்ளது. இதன் மூலம், கடந்த மூன்று காலாண்டுகளாக தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த ஊழியர் எண்ணிக்கை இப்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
செப்டம்பர் 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, TCS நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 612,724-ஐ தொட்டது. இது முந்தைய காலாண்டில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். அதேபோல 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 11,000 புதிய ஊழியர்களை டிசிஎஸ் நிறுவனம் பணியமர்த்தியது.

டிசிஎஸ் நிறுவனத்தின் HR ஆபிஸர் மிலிந்த் லக்காட் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு திட்டமிடல் குறித்து தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார். புதிய ஊழியர்களை சேர்ப்பதற்கான பாதையில் இருப்பதாகவும், அடுத்த நிதியாண்டிற்கான பணியமர்த்தல் செயல்முறையை ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், மார்ச் 2025-ஆம் ஆண்டில் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் 40,000 புதிய பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
2026-ஆம் நிதியாண்டுக்கான கேம்பஸ் செயல்முறையை தொடங்கிவிட்டோம். வாடிக்கையாளர்கள் எங்களிடம் ஒப்படைக்கும் சிக்கலான தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் எங்களை தயார்படுத்தி வருகிறோம் என்று லக்காட் கூறியுள்ளார்.
2024 ஆம் நிதியாண்டில் கடந்த 19 ஆண்டுகளில் முதல்முறையாக டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 13,249 ஊழியர்களை குறைத்தது. இதனால் அந்த குறிப்பிட்ட வருடத்தின் முதல் காலாண்டில் ஊழியர் குறைப்பு விகிதம் 12.3 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் கடந்தாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்த விகிதம் 14.9 சதவீதமாக உயர்ந்தது.
நிதி செயல்திறனைப் பொறுத்தவரை, TCS இரண்டாம் காலாண்டில் ரூ.11,909 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 5% அதிகரிப்பாகும். இருப்பினும், இது பகுப்பாய்வாளர்களின் எதிர்பார்ப்பை விட குறைவாக உள்ளது. அதேபோல இந்தக் காலாண்டின் வருவாய் ரூ.64,259 கோடியாக 7.6% அதிகரித்துள்ளது.
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் அதிகரிப்பு காரணமாக பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்கங்களை அறிவித்து வரும் நிலையில், டிசிஎஸ் தொடர்ந்து பணியமர்த்தலை செய்து வருவது பல மாணவர்களுக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications