இந்திய ஐடி சேவை துறை மந்தமான வளர்ச்சியை எதிர்நோக்கி இருக்கும் வேளையில், செப்டம்பர் காலாண்டில் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்த நிலையில் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்கும் அளவீட்டையும், எண்ணிக்கையும் திருத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்போசிஸ் இந்த வருடம் கேம்பஸ் இண்டர்வியூவ்-க்கு செல்ல விரும்பவில்லை என்ன தெரிவித்திருக்கும் வேளையில் ஒட்டுமொத்த பட்டதாரிகளும், கல்லூரி மாணவர்களும் அதிர்ச்சி அடைந்த நிலையில் டிசிஎஸ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரியான என் கணபதி சுப்ரமணியம் கூறுகையில் நடப்பு நிதியாண்டிள் 40000 பிரஷ்ஷர்ஸ் ஊழியர்களை கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் சேர்க்கும் இலக்கில் சரியான பாதையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். பொதுவாக நாங்கள் வருடத்திற்கு 35000 முதல் 40000 பிரஷ்ஷர் ஊழியர்களை பணியில் சேர்ப்போம், இதை இந்த வருடமும் உறுதி செய்ய உள்ளோம் என சிஓஓ என் கணபதி சுப்ரமணியம் தெரிவித்தார்.
மேலும் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யும் அளவுக்கு சூழ்நிலையும் இல்லை, ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து செயல்படுத்தும் காரணத்தால் தொடர்ந்து பணியாளர்களை சேர்ப்பு அதிகரித்து வருகிறோம். மேலும் எங்கள் நிறுவனத்தில் பென்ச்-ல் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.
இதேபோல் லேட்டரல் பிரிவிலும் ஊழியர்களை பணியில் சேர்க்க திட்டமிட்டு உள்ளோம், ஆனால் சந்தையின் டிமாண்ட் அடிப்படையில் இப்பிரிவில் அதிக ஊழியர்களை சேர்க்க உள்ளோம். கடந்த 12- 14 மாதங்களில் அதிகப்படியான ஊழியர்கள் வெளியேறிய காரணத்தால் அட்ரிஷன் விகிதம் உயர்வாக இருந்தது.
இந்த பிரச்சனை எப்போது தீரும் என தெரியாத நிலையில் இருக்கும் காரணத்தால் தொடர்ந்து அதிகப்படியான ஊழியர்களை பணியில் சேர்த்து வருகிறோம். மேலும் தற்போது எங்கள் நிறுவனத்தின் ஊழியர்களின் பயன்பாட்டு விகிதம் 85 சதவீதமாக உள்ளது. முன்பு 87 முதல் 90 சதவீதம் வரையில் இருக்கும் எனவும் டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரியான என் கணபதி சுப்ரமணியம் தெரிவித்தார்.
தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 6 லட்சம் ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேர் பென்ச்சில் உள்ளனர். இந்த 60000 ஊழியர்களும் கடந்த 12 மாதத்தில் டிரைனிங், இன்டக்ஷன், அப்ஸ்லிக்கிங் செய்து வருகின்றனர. இவர்கள் அனைவரும் productive pool பிரிவில் உள்ளனர் கணபதி சுப்ரமணியம் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications