இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) இந்த ஆண்டு 40,000 ட்ரைனி ரோலுக்கு பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய நிறுவனத்தின் தலைமை HR அதிகாரியான மிலிந்த் லக்காட் அடுத்த வருடம் 40,000-த்திற்கும் மேற்பட்டவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அக்டோபர் முதல் டிசம்பர் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை டிசிஎஸ் நிறுவனம் அறிவித்தது. அதிலிருந்து ஒரு நாளைக்குப் பிறகு இந்த பிரத்தியேக பணியாளர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெளியான நிதிநிலை அறிக்கையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை 5370-ஆகக் குரைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மூன்றாவது காலாண்டில் மொத்த பணியாளர் எண்ணிக்கை 607,354-ஆக குறைந்தது. இந்த எண்ணிக்கை இரண்டாவது காலாண்டின் இறுதியில் 612,724 ஆக இருந்தது.

2024 முதல் 2025-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் டிசிஎஸ் பணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தற்போது பணியாளர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து விலகிய ஊழியர்களின் எண்ணிக்கை 12.3 சதவீதமாக உயர்ந்ததாகவும், இது நிறுவனத்தின் எதிர்பார்க்கப்பட்ட வரம்பிற்குள் இருப்பதாகவும் மிலிந்த் கூறியுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்க குடிவரவுத் துறையின் தரவுகள் வெளியானது. அதில் அமெரிக்காவில் வழங்கப்பட்ட அனைத்து H-1B விசாக்களில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் பெற்றுள்ளன என்பது தெரியவருகிறது. அதில் இன்போசிஸ் நிறுவனம் 8,140 விசாக்களையும், டிசிஎஸ் நிறுவனம் 5247 விசாக்களையும் பெற்று முன்னணி வகிக்கின்றன.
அமெரிக்க விசாக்களை சார்ந்திருப்பது காலப்போக்கில் குறைந்துள்ளதாக TCS நிறுவனத்தின் CHRO தெரிவித்துள்ளார். "நாங்கள் உலகம் முழுவதும் பணியமர்த்த விரும்புகிறோம். அதற்காக வெவ்வேறு இடங்களில் இருந்து பணியாளர்களை தேர்வு செய்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
அதிக அளவிலான பணி நீக்கங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது ஐடி துறை மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. அதற்கு ஏதுவாக டிசிஎஸ் நிறுவனம் பணியமர்த்த இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி வேலைக்கு தயாராகும் நபர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 2030-ஆம் ஆண்டுக்குள் அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று பல்வேறு அறிக்கைகளும் வெளியாகி உள்ளன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications