இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ், தனது ஊழியர்களின் பணிகளை கண்காணிக்கும் முறையை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 6 லட்சம் ஊழியர்களின் லேப்டாப்பில் Digital User Experience Monitoring tool என்ற புதிய மென்பொருளை நிறுவ முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு டிசிஎஸ் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. சமீபத்தில் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்ரேஷன், ஊழியர்களின் மவுஸ் மற்றும் கீபோர்டு இயக்கத்தை பயன்படுத்தி உற்பத்தித்திறனை அளவிடும் புதிய கருவிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதேபோல தற்போது டிசிஎஸ்-ம் ஊழியர்களை கண்காணிக்க முடிவு செய்துள்ளது, எனவே டிசிஎஸ் நிறுவும் இந்த டூல் மூலம் எதையெல்லாம் கண்காணிக்கப்போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
டிசிஎஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு கொடுத்துள்ள அனைத்து லேப்டாப்களிலும் இந்த புதிய டூல் இன்ஸ்டால் செய்யப்பட உள்ளது. இந்த டூல் எவ்வொரு ஊழியரும் எந்த அப்பிளிகேஷனை பயன்படுத்துகிறார், எந்த எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார் என்பது போன்ற தகவல்களை திரட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகைய கண்காணிப்பு மூலம் டிசிஎஸ் நிர்வாகம் 2 முக்கியமான பிரச்சனைகளை களைய உள்ளது. முதலாவது விஷயம் தகவல் திருட்டு மற்றும் தகவல் வெளியே பகிர்வதை தடுக்க முடியும். இதன் வாயிலாக நிறுவனத்தின் பாதுகாப்பு பெரிய அளவில் மேம்படுத்த முடியும். இரண்டாவது விஷயம் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள் லேப்டாப்-ல் அவர்களின் இயக்கத்தை கண்காணிப்பதில் பெரியளவிலான கண்ட்ரோல் கிடைக்கும்.
இந்திய ஐடி ஊழியர்கள் ஏற்கனவே ஏஐ, ஆட்டோமேஷன் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான பணி சுமை மற்றும் வேலைவாய்ப்பில் உறுதியற்ற தன்மையை எதிர்கொண்டு வரும் வேளையில் இத்தகைய கட்டுப்பாடு கூடுதல் அச்சத்தையும், நெருக்கடியையும் ஊழியர்கள் கொடுக்கிறது என கருத்து நிலவுகிறது. காலம் காலமாக நிறுவனங்கள் ஊழியர்களின் செயல்பாட்டை பல்வேறு வகையில் கண்காணித்து வருகிறது.
ஆனால் இதில் பெரிய அளவிலான கம்யூனிகேஷன் கேப் இருந்து வருகிறது. இதேவேளையில் டிசிஎஸ் இந்த டூல் பயன்படுத்த முக்கிய காரணம், டிதிஎஸ் தளத்தில் யூசர் எக்ஸ்பிரீயன்ஸ் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யவே இதை பயன்படுத்தப்படாலம் என நினைப்பதாக EIIRTrend நிறுவனத்தின் சிஇஓ பிரதீக் ஜெயின் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனமும் Zscaler நிறுவனமும் ஒரு முக்கியமான ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் மூலம் வொர்க்ஸ்பேஸ் எக்ஸ்பிரீயன்ஸ் ஸ்டூடியோ அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
TCS நிறுவனம், ஊழியர்களின் Monitoring கருவி மூலம்கண்காணிப்பதாக வெளியான தகவல்களை முழமையாக மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை என TCS தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications