டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் பெரிய பணிநீக்க அறிவிப்பு வெளியிட்டு நாட்டின் ஒட்டுமொத்த ஐடி மற்றும் டெக் ஊழியர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. இந்தியாவில் 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களில் வேகமாக ஐடி மற்றும் டெக் சேவைத் துறை வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் டிசிஎஸ் போன்ற பெரு நிறுவனங்கள் எடுக்கும் முடிவு பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் 2026 மார்ச் மாதத்திற்குள் 12,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து டிசிஎஸ் சிஇஓ கே. கிருதிவாதன் கூறுகையில், நிறுவனத்தை "எதிர்காலத்திற்குத் தயார் நிலையில்" வைக்க இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஏஐ தாக்கமா?:
சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மூலம் ஊழியர்களின் உற்பத்தித் திறன் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது பணிநீக்க அறிவிப்பு வந்துள்ளது. ஆனால் இந்த பணிநீக்கம் ஏஐ பயன்படுத்துவதால் எடுக்கப்பட்டது இல்லை, ஊழியர்களின் திறன் தற்போதைய வர்த்தக முறைக்கு பொறுத்துமற்றதாக இருக்கும் காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசான் தெரிவித்தார்.
டாப் 5 ஐடி சேவை நிறுவனங்கள்:
தற்போதைய பிரச்சனை என்னவென்றால் பொதுவாக இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் பல விஷயங்களை ஒருவருக்கு ஒருவர் பாலோ செய்வது வழக்கம். உதாரணமாக பிரஷ்ஷர்ஸ் சம்பளத்தில் துவங்கி, வேரியபிள் பே, சம்பள உயர்வு என அனைத்திலும் முடிவுகள் ஓரே மாதிரியாக இருக்கும். இப்படியிருக்கையில், டிசிஎஸ் நிறுவனத்தைப் போலவே பிற நிறுவனங்களும் இத்தகைய பணிநீக்கத்தை அறிவிக்குமா என்பது தான் தற்போதைய முக்கியமான கேள்வியாக உள்ளது.
ஸ்டார்ட்அப் துறை:
TCS இந்த முடிவால் IT துறையில் ஒரு முன்மாதிரியை உருவாக்கலாம் என்று அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களைக் குறைத்து வருவதாகத் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதேபோல், மற்ற IT சேவை நிறுவனங்களும் தங்கள் வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் திட்டங்களைப் புதுப்பிக்கலாம் என்று தெரிகிறது.
4 முக்கிய சொற்கள்:
இந்த மாற்றங்களை இந்திய கார்ப்ரேட் நிறுவனங்கள் 4 விதமான சொற்களில் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது. இந்த 4 சொற்களுக்கும் தனிப்பட்ட பொருள் உள்ளது. Future-ready - தற்போது செலவுகள் அதிகமாக இருக்கிறது, Skill realignment - உங்களுடைய திறன் போதுமானதாக இல்லை, Technological transformation - ஏஐ உங்கள் வேலையை எளிதாகச் செய்துவிடும், Strategic restructuring - ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

ஐடி மற்றும் பிபிஓ:
AI தொழில்நுட்பம் ஐடி துறைக்கு மட்டுமல்ல, பிற துறைகளையும் பாதிக்கலாம். உதாரணமாக, BPO துறையில் AI பயன்பாடு பெரிய அளவில் அதிகரிக்கும் போது வேலைவாய்ப்பு அதிகளவில் குறையலாம். இந்த பாதிப்ப ஐடி துறையைத் தாண்டி இந்திய நுகர்வோர் சந்தையையும் பாதிக்கும் என்பது தான் தற்போதைய முக்கியமான பிரச்சனை.
நுகர்வோர் சந்தை:
இந்தியாவின் நுகர்வு சந்தையில் ஐடி சேவைத் துறையும் அதன் ஊழியர்களையும் அதிகம் நம்பியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஐடி ஊழியர்களின் சம்பளம் குறையும் போதோ அல்லது அதிகப்படியான பணிநீக்கம் இருக்கும் போதோ மக்கள் செலவு செய்யமாட்டார்கள், இதனால் இந்திய நுகர்வு சந்தை பாதித்து, ஒட்டுமொத்த வர்த்தக துறையும் பாதிக்கும் நிலை உருவாகும்.
ரியல் எஸ்டேட்:
முக்கியமாகப் பெங்களூரு போன்ற IT நகரங்களில் ரியல் எஸ்டேட், வீட்டு விலை மற்றும் வாடகை குறைய வாய்ப்புள்ளது. பணிநீக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் ஊழியர்கள் அதிகம் செலவிட முடியாது. இதேபோன்ற பாதிப்பு சென்னை, குர்கான், நொய்டா, புனே, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் நடக்கும்.
வங்கி மற்றும் நிதித் துறை:
மேலும் வங்கிகள் மற்றும் NBFC தங்கள் பிரீமியம் வாடிக்கையாளர்கள் அதாவது ஐடி ஊழியர்கள் கடன் வாங்குவதை நிறுத்தி, கடனை திருப்பிச் செலுத்துவதில் பிரச்சனை எதிர்கொள்ளலாம்.
ஆட்டோமொபைல், சுற்றுலாத் துறை:
இதேபோல் ஆட்டோமொபைல் துறையும் பாதிக்கப்படலாம், ஏனெனில் கார் விற்பனை குறையலாம். கிரெடிட் கார்டு நிறுவனங்கள் திடீரென கடன் வசூல் அளவில் பாதிப்பை எதிர்கொள்ள. மேலும் பயணம் மற்றும் சுற்றுலாத் துறையும் பாதிப்பாக்கப்படலாம். ஏனெனில் மக்கள் சம்பளமின்றி மக்கள் செலவு குறைக்கும் காரணத்தால் உணவகங்களுக்குக் கூட செல்ல தயங்கும் நிலை வரலாம்.
எட்டெக் துறை:
இந்த இக்கட்டான சூழ்நிலையில் சில நிறுவனங்கள் பயன் பெறலாம். குறிப்பாக EdTech நிறுவனங்கள் இதில் அதிகம் பலன் அடைய வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான ஐடி ஊழியர்கள் தற்போதைய சூழ்நிலையில் reskilling செய்துகொள்ள முயற்சிப்பார்கள் இதனால் எட்டெக் நிறுவனங்களின் தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
முயற்சி தோல்வி:
இந்திய ஐடி நிறுவனங்கள் கொரோனா காலத்தில் "டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன்" பெயரில் குறைந்த காலகட்டத்தில் அதிகப்படியான ஊழியர்களை பணியில் அமர்த்தப்பட்டனர், ஆனால் இது பலன் அளிக்கவில்லை என்பதைத் தான் தற்போதைய டிசிஎஸ்-ன் 12000 ஊழியர்களின் பணிநீக்கம் காட்டுகிறது.
முக்கிய கேள்வி:
தற்போதைய முக்கியமான கேள்வி என்னவென்றால் TCS-ன் இந்த முடிவு ஒரு தற்காலிக பாதிப்பா அல்லது ஐடி துறையில் நீண்ட கால நடைமுறையின் தொடக்கமா என்பதே. AI தொழில்நுட்பம் வேலைவாய்ப்பு துறையை தலைகீழாகப் புரட்டிப்போகிறது என்றாலும், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை Reskilling செய்து பயன்படுத்துவது முக்கியம்.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications