இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிடத் தயாராகி வரும் இதேவேளையில், அமெரிக்காவில் 22 டெக் ஊழியர்களை இனம் மற்றும் வயது சார்ந்து பாகுபாடு காட்டி பணிநீக்கம் செய்ததாகவும், இவர்கள் இடத்தில் ஹெச்1பி விசாவில் இருக்கும் இந்திய ஊழியர்களை நியமித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த செய்தி அமெரிக்க டெக் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் டிசிஎஸ் இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க மறுபுறம் புதிய தொழில்நுட்பமான AI துறையில் புதிய மற்றும் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற டிசிஎஸ் முக்கியமான நடவடிக்கை எடுத்து பெரும் சாதனையைப் படைத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதை முக்கிய இலக்காகக் கொண்டு இருந்த டிசிஎஸ், முதன்மையாக தனது ஊழியர்களை இப்பிரிவில் திறமையானவர்களாக மாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்தது. இதன் வாயிலாக நிறுவனத்தின் பணியாளர்களில் ஒரு பெரும்பகுதியினருக்கு Generative AI திறன்களில் பயிற்சி அளித்து வெற்றி பெற்றுள்ளது டிசிஎஸ்.
டிசிஎஸ் நிறுவனத்தில் 6.1 லட்சம் ஐடி ஊழியர்கள் இருக்கும் வேளையில், இதில் 3.5 லட்சம் பணியாளர்களுக்கு Generative AI தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்பட்டதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இது முன்னதாக அறிவிக்கப்பட்ட 1.5 லட்சம் பணியாளர்களை விட கிட்டத்தட்ட 100 சதவீதம் அதிகமாகும்.
"3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு Generative AI அடிப்படை திறன்களில் பயிற்சி அளிக்கப்பட்டதன் மூலம், உலகிலேயே மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட பணியாளர் படையை TCS உருவாக்கியுள்ளது" என்று டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகளில் கவனம் செலுத்தும் வகையில் ஒரு தனிப்பட்ட வணிக பிரிவை நிறுவிய முதல் தொழில்நுட்ப நிறுவனமாக TCS திகழ்கிறது. Generative AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விமான நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது, விமானங்கள் தாமதம் அல்லது ரத்து செய்யப்படும்போது வாடிக்கையாளர்களுடன் இயற்கையான உரையாடல்களை மேற்கொள்வது, மாற்று வழித்தடங்களைப் பரிந்துரைப்பது போன்ற பணிகளில் TCS AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது.
மேலும், Generative AI திறன்களைப் பயன்படுத்தி ஒப்பந்த ஆய்வுகள் பல்வேறு செயல்பாடுகளை ஆட்டோமேட் செய்துள்ளது டிசிஎஸ். வெள்ளிக்கிழமை, அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) நிறுவனம், ஜெனரேட்டிவ் AI திறன் பார்ட்னர் என்ற அங்கீகாரத்தை TCS நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
TCS நிறுவனத்தின் இந்த முயற்சி, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியில் ஒரு மைல் கல் ஆகும். இதன் மூலம், எதிர்கால தொழில்நுட்ப சவால்களைச் சமாளிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கவும் நிறுவனம் தயாராகிறது.
TCS நிறுவனத்தின் AI துறையில் வளர்ச்சி அடைந்தது மட்டும் அல்லாமல் நிறுவனத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை ஏஐ துறையில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதால், இனி ஏஐ துறையில் சிறிய முதல் பெரிய திட்டங்களை டிசிஎஸ் நிறுவனத்தால் எளிதாகக் கையாள முடியும்.
இதேபோல் ஏற்கனவே பெற்றுள்ள திட்டத்தில் ஏஐ சேவைகளைக் கூடுதல் அல்லது இணைப்பு சேவையாகக் கொடுத்து அதிகப்படியான வருமானத்தையும், லாபத்தைப் பெற முடியும். மேலும் ஏஐ துறையில் டிசிஎஸ் இதன் மூலம் முன்னோடியாகத் திகழ்வது மட்டும் அல்லாமல் இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற பிற நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டியை அளிக்க முடியும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications