இந்தியா ஐடி சேவை துறை ஏற்கனவே பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில், டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ கே.கிருதிவாசன் புதிய பிரச்சனைகளை எதிர்கொண்டு உள்ளார். 2023 ஆம் ஆண்டில் 3 நிறுவனத்திடம் வர்த்தகத்தை இழந்து வர்த்தக நெருக்கடியில் மாட்டியுள்ள நிலையில் டிசிஎஸ்-க்கு மகாராஷ்டிர அரசு புதிதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிரா அரசின் தொழிலாளர் துறை டிசிஎஸ்-க்கு ஊழியர்களை முறையற்ற வகையில் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. என்ன நடந்தது தெரியுமா..?

இந்தியாவின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நவம்பர் மாதம் சுமார் 2000 ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு ஈமெயில் அனுப்பியது, இந்த ஈமெயிலில் டிசிஎஸ் நிர்வாகம் வர்த்தகக் காரணமாக உங்களின் பணியிடத்தை மாற்றுகிறது எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது மட்டும் அல்லாமல் அடுத்த 2 வாரத்திற்குள் உங்களின் புதிய வொர்க் லொகேஷனுக்குச் சென்று லாகின் செய்ய வேண்டும் என்று கண்டிப்பான தொனியுடன் உத்தரவு வந்தது. மேலும் டிரான்ஸ்பர் செய்யப்படும் ஊழியர்களின் பயணத்திற்கான விமான டிக்கெட், தங்குவதற்காக ஊழியர்களின் செலவுகளை நிறுவனத்தின் கொள்கைகள் படி திருப்பிச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஊழியர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது மட்டும் அல்லாமல், டிசிஎஸ் நிறுவனத்தின் அந்த உத்தரவை எதிர்த்து அப்போதே ஐடி ஊழியர்களுக்கான அமைப்பாக விளக்கும் Nascent Information Technology Employees Senate (NITES) டிசிஎஸ் நிறுவனம் செய்தது நெறிமுறையற்ற டிரான்ஸ்பர் நடைமுறைகள் எனக் குற்றம்சாட்டியது மட்டும் அல்லாமல் மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
NITES அமைப்பு சுமார் 300 ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்குக் கடிதம் அனுப்பியது. இந்தக் கடிதத்தில் NITES அமைப்பு முறையற்ற வகையில் சுமார் 2000 ஊழியர்களை எவ்விதமான ஆலோசனை செய்யாமல் திடீரென ஊழியர்கை இடமாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்களைத் தங்களது குடும்பத்தையும், இருப்பிடத்தையும் விடுத்து வெளியேற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு மகாராஷ்டிரா அரசின் தொழிலாளர் துறை மராத்தி மொழியில் அச்சிடப்பட்ட நோட்டீஸ்-ல், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய ஜனவரி 18 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு உரிய உறுப்பினர்கள் உடன் நேரில் வந்து விளக்கம் கொடுக்குமாறு, முகவரியைப் பதிவிட்டு உள்ளது.
இந்த விசாரணையில் டிசிஎஸ் தரப்பில் தவறு இருந்தால் கட்டாயம் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும். இதற்கு முன்பு டிசிஎஸ் சுமார் 200 லேட்டரல் ஊழியர்களுக்கு ஆஃபர் லெட்டர் கொடுத்துவிட்டு, பணியில் சேர்ப்பதைத் தாமதம் செய்தது குறித்து மகாராஷ்டிரா அரசின் தொழிலாளர் துறை நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications