இந்தியாவின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சமீபத்தில் வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை ஊழியர்களுக்குக் கட் செய்துவிட்டு அனைத்து அசோசியேட் ஊழியர்களையும் கண்டிப்பான டிரஸ் கோட் உடன் கட்டாயம் வாரத்தில் 5 நாளும் அலுவலகம் வர வேண்டும் என்ற முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது.
இதுவே பலருக்கும் பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக மாறியிருக்கும் வேளையில் டிசிஎஸ் நிறுவனம் தற்போது சுமார் 2000 ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஈமெயில் அனுப்பியுள்ளது. இதில் டிசிஎஸ் நிர்வாகம் வர்த்தகக் காரணமாக உங்களின் பணியிடத்தை மாற்றுகிறது எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது மட்டும் அல்லாமல் அடுத்த 2 வாரத்திற்குள் உங்களின் புதிய வொர்க் லொகேஷனுக்குச் சென்று லாகின் செய்ய வேண்டும் என்றும், டிரான்ஸ்பர் செய்யப்படும் ஊழியர்களின் பயணத்திற்கான விமான டிக்கெட், தங்கும் செலவுகளை நிறுவனத்தின் கொள்கைகள் படி திருப்பிச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஐடி ஊழியர்களுக்கான அமைப்பாக விளக்கும் NITES எனப்படும் Nascent Information Technology Employees Senate, டிசிஎஸ் நிறுவனத்தின் இந்தச் செயல்பாடுகள் நெறிமுறையற்ற டிரான்ஸ்பர் நடைமுறைகள் எனக் குற்றம்சாட்டியது மட்டும் அல்லாமல் மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
NITES அமைப்பு தனது கடிதத்தில் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களின் பணியிடங்களை எவ்விதமான முன் ஆலோசனைகள் இல்லாமல் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு மாற்றுவதைக் கட்டாயப்படுத்துகிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மூலம் பல வருடமாக தங்கி பணியாற்றி வரும் ஊழியரை தன்னுடைய வீடு, சமுகம் ஆகியவற்றில் இருந்து பிடுங்குகிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் இந்தச் செயல்பாடுகள் டிசிஎஸ் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று NITES அமைப்பு மத்திய தொழிலாளர் அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது. மேலும் அதில் டிசிஎஸ்-ன் நடவடிக்கைகள் நெறிமுறையற்றவை மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறுவதாக நாங்கள் நம்புகிறோம் எனவும் குறிப்பிட்டு உள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் மட்டும் அல்லாமல் பிற ஐடி சேவை நிறுவனங்கள் புதிதாகச் சேர்ந்த ஊழியர்களுக்கு டிரைனிங் முடிந்த உடன் தேவையான இடத்தில் பணியில் அமர்த்துவது வழக்கம் தான். இதேபோல் சில திடீர் வர்த்தகச் சேவை காரணமாக, பிராஜெக்ட் அவசியத்தைக் கருத்தில் கொண்டு டிரான்ஸ்பர் என்பது வழக்கமாக நடப்பது தான் என இத்துறையில் இருப்பவர்கள் கூறுகின்றனர்.
டிசிஎஸ் ஊழியர்கள் ஒருவருக்கு வந்த ஈமெயில் இதுதான் 'நவம்பர் 10, 2023 முதல் நீங்கள் டிசிஎஸ் ஹைதராபாத் அலுவலகத்திலிருந்து மும்பை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இது நிறுவனம் வலியுறுத்தும் இடம் மாற்றமாகும், மேலும் இந்தக் கடிதம் கிடைத்ததிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் (14 நாட்கள்) நீங்கள் மாற்றப்பட்ட இடத்திற்குப் பணியில் சேர வேண்டும் மற்றும் உங்கள் டிரான்ஸ்பர் முறைகளை முடிக்க வேண்டும் என்று Career Nextstep-ல் இருந்து TCS Confidential என்ற தலைப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications