இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக டாட்டா குழுமத்திற்கு உட்பட்ட டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அண்மையில் தான் டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய பெஞ்ச் கொள்கையை மாற்றியமைத்தது. இதன்படி ஒரு வருடத்தில் 35 நாட்களுக்கு ப்ராஜெக்ட் இல்லாமல் ஒரு ஊழியர் இருக்கிறார் என்றால் அந்த ஊழியருக்கு பதவி குறைப்பு அல்லது பணியில் இருந்து நீக்கப்படுவார் என்ற வகையில் கொள்கைகளை மாற்றி அமைத்து இருந்தது. இது டிசிஎஸ் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
டிசிஎஸ் மீது புகார்: இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு எதிராக Nascent Information Technology Employees Senate எனப்படும் ஐடி ஊழியர்களுக்கான அமைப்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. அதில் டிசிஎஸ் நிறுவனம் 600 ஊழியர்களை பணிக்கு தேர்வு செய்துவிட்டு அவர்களை இன்னும் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமாக வேலையில் அமர்த்தாமல் இருக்கிறது என குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டியாவுக்கு ஜூலை 22 ஆம் தேதியிட்டு கடிதம் எழுதியுள்ளனர்.

600 பேரை சேர்க்காமல் இழுத்தடிப்பு: அந்த கடிதத்தில் டிசிஎஸ் பணி அனுபவம் கொண்ட சுமார் 600 பேரை புதிதாக வேலைக்கு எடுத்துவிட்டு அவர்கள் வேலைக்கு சேர வேண்டிய தேதியை அறிவிக்காமல் காலவரையின்றி தள்ளி வைத்திருக்கிறது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2 முதல் 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டவர்களை வேலைக்கு தேர்வு செய்து ஆஃபர் லெட்டர் கொடுத்துவிட்டு அவர்கள் எந்த தேதியில் வேலைக்கு சேர வேண்டும் என்பதை தெரிவிக்காமல் இழுத்தடிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ரீதியான சிக்கல்கள்: இந்த ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் ஏற்கனவே தாங்கள் வேலை செய்து வந்த வேலையை ராஜினாமா செய்து விட்டனர். தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்வது இழுத்தடிக்கப்படுவதால், பழைய வேலையும் விட்டுவிட்டு இவர்கள் அனைவரும் தவித்து வருகின்றனர் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நிதி ரீதியான சிரமங்களை இவர்கள் எதிர்கொள்கின்றனர் இந்த ஊழியர்கள் பெரும்பாலும் பெங்களூரு, ஹைதராபாத், புனே,கொல்கத்தா , மும்பை மற்றும் டெல்லி பகுதியை சேர்ந்தவர்கள் என அந்த கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
அரசு தலையிட கோரிக்கை: இந்த ஊழியர்கள் வீட்டு வாடகை மற்றும் பிற வாழ்க்கை செலவினங்கள் , இஎம்ஐ செலுத்துவது உள்ளிட்டவற்றுக்கு சிரமப்படுகின்றனர், அரசு இதில் தலையிட்டு அவர்களுக்கு வேலையை அறிவிக்கவும் காத்திருக்கும் நாட்களுக்கு நிதி ரீதியான நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஊழியர்கள் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்த அமைப்பின் தலைவரான ஹர்ப்ரித் சிங் சலூஜா தெரிவித்திருக்கிறார்.
டிசிஎஸ் தரப்பில் விளக்கம்: இதற்கிடையே டிசிஎஸ் நிறுவனம், எப்பொழுதுமே நாங்கள் அளித்த உறுதியை நிறைவேற்றுவோம் என ஈடி நவ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்துள்ளது. ஃபிரெஸ்ஸர்களாக இருந்தாலும் சரி அனுபவம் கொண்ட தொழில் நிபுணர்களாக இருந்தாலும் சரி எங்களிடமிருந்து ஆஃபர் லெட்டர் பெற்றவர்கள் கண்டிப்பாக நிறுவனத்தில் சேர்க்கப்படுவார்கள் , இவர்கள் சேரும் தேதி என்பது தொழில் தேவை அடிப்படையாகக் கொண்டுதான் நிர்ணயம் செய்யப்படுகிறது என கூறி இருக்கிறது. அனைத்து ஊழியர்களிடமும் நாங்கள் தொடர்பில் தான் இருக்கிறோம் விரைவில் அவர்கள் அனைவரும் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றுவார்கள் என கூறியிருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications