இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மிகப்பெரிய AI அடிப்படையிலான டெக் சேவை நிறுவனமாக மாறும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏஐ டேட்டா சென்டர் அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்திருக்கும் டிசிஎஸ் தற்போது மொத்த ஐடி சேவை ஆப்ரேஷன்ஸ்-ஐ ஏஐ அடிப்படையில் மாற்ற முடிவு செய்து இதற்கான ப்ளூபிரின்ட் வெளியிட்டது மட்டும் அல்லாமல் ஏஐ சேவை மூலம் பெரியளவிலான வருவாய் ஈட்டவும் துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த தகவல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை மனம் குளிர வைத்துள்ளது என்றால் மிகையில்லை, இன்று சென்செக்ஸ், நிஃப்டி சரிவில் தள்ளாடிக் கொண்டிருக்கும் வேளையில் டிசிஎஸ் பங்குகள் உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் TCS பங்கு விலை கிட்டத்தட்ட 1 சதவீதம் உயர்ந்து ரூ.3,238ஆக வர்த்தகமானது.
டிசிஎஸ் நிறுவனத்தின் Analyst Day நேற்று நடந்தது, இந்த நிகழ்ச்சியில் தான் டிசிஎஸ் தனது ஏஐ ப்ளூபிரின்ட்-ஐ வெளியிட்டது, இதன் வாயிலாகவே டிசிஎஸ் பங்கு விலை இன்று காலை உயர்ந்துள்ளது.

ஐந்து தூண் உத்தி:
TCS இனி வரும் காலத்தில் எப்படி தனது வர்த்தகத்தை கொண்டு செல்லப்போகிறது என்பது தான் ப்ளூபிரின்ட்-ன் அடிப்படை. இதற்கு டிசிஎஸ் ஐந்து தூண் அடிப்படையிலான உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்டர்னல் AI டிரான்ஸ்பார்மேஷன், அனைத்து சேவைகளையும் AI மூலம் மறுவடிவமைப்பு, எதிர்காலத்திற்கு தேவையான திறன் கொண்ட ஊழியர் மாதிரி உருவாக்கம், வாடிக்கையாளர்களுக்கு ரியல் வோல்டு AI பயன்பாடு, AI சுற்றுச்சூழலை விரிவாக்கம் (கூட்டணி, நிறுவனத்த வாங்குதல்கள், ஃபுல் ஸ்டாக் முதலீடு) ஆகியவை 5 முக்கிய தூண்களாக உள்ளன.
இந்த உத்தி தான் TCS நிறுவனத்தை AI சேவை துறையில் மிகப்பெரிய நிறுவனமாக நிலைநிறுத்தும் கட்டமைப்பாக இருக்கும். இதை உறுதி செய்யும் வரையில் டிசிஎஸ் நிறுவனத்தின் AI பிரிவின் வர்த்தகம் ஏற்கனவே பெரிய அளவில் உயர்ந்துள்லதாக இக்கூட்டத்தில் டிசிஎஸ் சிஇஓ கே.கிருதிவாசன் தெரிவித்துள்ளார்.
ஏஐ வருவாய்:
தற்போது டிசிஎஸ் நிறுவனம் 5,000க்கும் மேற்பட்ட AI திட்டங்களில் பணியாற்றி வருவதாகவும், ஏஐ சேவை மூலம் ஆண்டுக்கு ரூ.1.5 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் ஈட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஹெச்சிஎல் நிறுவனத்தை தொடர்ந்து டிசிஎஸ்-ம் ஏஐ பிரிவு வருவாயை தனிப்பட்ட முறையில் கணக்கிட்டு தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் ஏற்கனவே தனது பெரிய வாடிக்கையாளர்களில் 85 சதவீதம் பேருக்கு AI அடிப்படையிலான சேவைகளை அளித்து, அதை வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வருவதாகவும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
TCS டெலிவரி மாடல்:
டிசிஎஸ் நிறுவனம் தனது ஐடி சேவை டெலிவரி மாடலையும் மாற்றி வருகிறது. இதுநாள் வரையில் tool-assisted ஆட்டோமேஷனில் இருந்த டிசிஎஸ் டெலிவரி மாடல் இப்போது ஏஜென்டிக் மற்றும் ஆட்டோனமஸ் AI மாடல்களுக்கு மாறுகிறது. இதன் மூலம் டிசிஎஸ்-ன் உற்பத்தித்திறனை உயர்த்தி லாப வரம்பை பாதுகாக்கும் என நம்புகிறது.
ஐடி(ஏஐ) ஊழியர்கள்:
மேலும் TCS நிறுவனம் 1,80,000 ஊழியர்களுக்கு மேம்பட்ட AI பயிற்சி அளித்துள்ளது. ஏஐ வாயிலாக அட்வைசரி மற்றும் கன்சல்டிங் திறனையும் அதிகரித்துள்ளது.
நிறுவன கைப்பற்றல்:
TCS நிர்வாகம் ஏஐ சேவை திறனை வேகமாக வளர்த்துக்கொள்ள ஊழியர்களை ஒருபக்கம் பயிற்றுவித்தாலும், மறுப்புறம் கட்டமைப்பு அடிப்படையில் வேகமாகவும், வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவையை உடனடியாக கொடுக்கவும் ஏஐ துறையிலும், முக்கிய தொழில்நுட்பத்தில் பணியாற்றும் நிறுவனங்களை கைப்பற்றி அதன் மூலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற புது மாடலை கையில் எடுத்துள்ளது.
இதற்காக சேல்ஸ்ஃபோர்ஸ் போன்ற முக்கிய துறைகளில் திறன் கொண்ட நிறுவனங்களை வாங்க முடிவு செய்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் இரு சேல்ஸ்ஃபோர்ஸ் கன்சல்டிங் நிறுவனங்களை வாங்கியுள்ளது - ListEngage MidCo 72.8 மில்லியன் டாலருக்கும், Coastal Cloud 700 மில்லியன் டாலருக்கும் வாங்கியுள்ளது. இவ்விரு நிறுவனத்தையும் பணமாக கொடுத்து வாங்கியுள்ளது. இதன் மூலம் டிசிஎஸ் தனது பண இருப்பை முதலீடா மாற்றியுள்ளது.
ஏஐ டேட்டா சென்டர்:
டிசிஎஸ் நிறுவனம் கடந்த மாதம் TPG உடன் இணைந்து AI டேட்டா சென்டர் அமைக்க புது நிறுவனமான HyperVault உருவாக்கியுள்ளது. இதற்காக 2 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது.
பிரஷ்ஷர்ஸ்:
ஏஐ சேவையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் டிசிஎஸ் 2026ஆம் நிதியாண்டில் சுமார் 42,000 பிரஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டிருந்த TCS, இப்போது AI திறன் கொண்ட (AI-native) பிரஷ்ஷர்களுக்கு முன்னுரிமை தர உள்ளது. இது நிறுவனத்தின் AI முன்னேற்றத்துக்கு உதவும்.
More From GoodReturns

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!



Click it and Unblock the Notifications