இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிலையில் மொத்த இந்திய ஐடித் துறையும் ஆடிப்போய் நின்ற நிலையில் ஏஐ துறையில் தனது வர்த்தகத்தையும், ஊழியர்கள் படையை மேம்படுத்தும் முக்கிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
டாடா குழுமத்தின் அட்சய பாத்திரமாக விளங்கும் டிசிஎஸ், இந்த ஏஐ யுகத்தில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக புதிய பிரிவை உருவாக்கியது மட்டும் அல்லாமல் இத்துறைக்கு புதிய அதிகாரியை நியமித்துள்ளது. இது இந்திய ஐடி சேவை துறையில் முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசிஎஸ் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு (AI) திறன்வாய்ந்த ஊழியர்களை ஒருங்கிணைத்து புதிய 'ஏஐ மற்றும் சர்வீஸ் டிரான்ஸ்பார்மேஷன் பிரிவை' உருவாக்குவதாக ஆகஸ்ட் 26 அன்று அறிவித்ததுள்ளது. இந்த அறிவிப்பு, இந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அனுப்பிய உள் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப, டிசிஎஸ் தனது வணிக மாடாலை மறுவடிவமைப்பு செய்யும் முயற்சியில் சில மாதங்களுக்கு முன்பே இறங்கிய நிலையில், இதன் வெளிப்பாடாக இப்புதிய பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வீஸ் டிரான்ஸ்பார்மேஷன் பிரிவை உலகளவில் வழிநடத்த, டிசிஎஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகியான அமித் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 1 முதல் இவர் இப்புதிய பிரிவின் தலைவராக பெறுப்பேற்க உள்ளார். இவர், டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை இயக்க அதிகாரியான ஆர்த்தி சுப்பிரமணியன் கீழ் பணியாற்றுவார்.
அமித் கபூர், 26 ஆண்டுகளுக்கும் மேலாக டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மூத்த அதிகாரி ஆவார். தற்போது, இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அயர்லாந்து பிராந்தியங்களில் டிசிஎஸ்-இன் வணிகத்தை வழிநடத்தி வருகிறார். இது, டிசிஎஸ் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய வர்த்தக சந்தையாகும்.

இந்த புதிய பிரிவு மூலம் டிசிஎஸ் நிறுவனத்தின் சேவைகளை புதுப்பிக்கவும், ஏஐ சொல்யூஷன்ஸ் ஆழப்படுத்தவும், புதிய பார்ட்னர்ஷிப் எகோசிஸ்டம் உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதோடு டிசிஎஸ் நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ், இன்ஜினியரிங் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கு ஏஐ அடிப்படையிலான புதுமைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் டெக் துறையிலும், டெக் சேவை துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஐடி சேவை துறை நிறுவனங்கள் வர்த்தகத்தை இனி தொடர்ந்து இழக்கும் என கணிப்புகள் வெளியாகி வந்த சூழ்நிலையில் டிசிஎஸ் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
இந்த புதிய பிரிவு ஏஐ சேவை துறையில் முழுமையாக கவனம் செலுத்தி புதிய வர்த்தகத்தை இப்பிரிவில் பெற முயற்சிக்கும் என்பதால் அடுத்த 6-18 மாதத்தில் இத்துறையில் திறன் முழுமையாக தெரிய வரும். இதேபோல் இந்த மாடல் ஏற்புடையதாக இருந்தால் இதே பார்மூலாவை இன்போசிஸ், ஹெச்சிஎல் போன்ற பிற போட்டி நிறுவனங்களும் பின்பற்ற வாய்ப்பு அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications