இந்தியாவின் முன்னணி IT சேவை நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) 2025-ஆம் நிதியாண்டின் 2-வது காலாண்டில் பல மூத்த ஊழியர்களின் வேரியபிள் பே என்று சொல்லப்படுகிற போனஸை குறைத்து வழங்கியுள்ளது. சில ஊழியர்கள் எதிர்பார்த்த போனஸ் தொகையில் 20 சதவீதம் முதல் 40 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளனர். மற்றவர்களுக்கு எந்த வித பே அவுட்டும் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின் படி சீனியர் லெவல் டிசிஎஸ் ஊழியர்கள் தங்களின் வேரியபிள் பே-வில் 20 முதல் 50 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளனர். ஆனால் ஜூனியர் ஊழியர்கள் 100 சதவீதம் வரை பேஅவுட்டை பெற்றுள்ளனர். இந்த போனஸ் குறைப்பு டிசிஎஸ் நிறுவனத்தின் முடிவுக்கு பின்னணியில் உள்ள காரணத்தை தெரிந்து கொள்ள தூண்டியுள்ளது.

செயல்திறன் அடிப்படையிலான வேரியபிள் பே: வேரியபிள் பே என்பது ஒவ்வொரு நிறுவனத்தையும் பொறுத்து மாறுபடும். அதாவது சில நிறுவனங்கள் செயல் திறன் அடிப்படையில் வேரியபிள் பே வழங்கும். சில நிறுவனங்கள் ஊழியர்களின் அலுவலக வருகை, செயல் திறன் மற்றும் பிற காரணிகளையும் கருத்தில் கொண்டு வழங்கும்.
எப்படி வேரியபிள் பே டிசிஎஸ் நிறுவனத்தில் கணக்கிடப்பட்டது என்று HR-ரிடம் ஒரு ஊழியர் கேட்டபோது, வேரியபிள் பே எப்படி கணக்கிடப்பட்டது என்பது தனக்கு தெரியவில்லை என்று கூறியதாக அந்த ஊழியர் தெரிவித்திருக்கிறார். அதேபோல நிறுவனத்தின் உள்ள பல்வேறு யூனிட்களின் காலாண்டு செயல் திறன் அடிப்படையில் வேரியபிள் பே கணக்கிடப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
வேரியபிள் பே குறித்த டிசிஎஸ்-இன் பதில்: டிசிஎஸ் நிறுவனம் 2025-ஆம் நிதியாண்டின் 2-வது காலண்டில் ஜூனியர் கிரேடுகளுக்கு 100% வேரியபிள் பே செலுத்தியுள்ளோம். மற்ற அனைத்து கிரேடுகளுக்கும் அவர்கள் பணிபுரிந்த யூனிட்டின் செயல் திறனை பொறுத்து வேரியபிள் பே வழங்கியுள்ளோம் என்று கூறியுள்ளது.
2024-ஆம் ஆண்டில் டிசிஎஸ் பணியமர்த்திய ஊழியர்களின் எண்ணிக்கை: இரண்டாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையை அறிவிக்கும் போது டிசிஎஸ் 2025-ஆம் நிதி ஆண்டின் 5726 பெயரை பணியமர்த்தியுள்ளதாக கூறியுள்ளது.
மூன்று காலாண்டுகளாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வைத்திருந்த டிசிஎஸ் நிறுவனம், தற்போது மீண்டும் 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. Q1 காலாண்டில் 5452 பணியாளர்களை டிசிஎஸ் நிறுவனம் பணியமத்தியது. செப்டம்பர் 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி டிசிஎஸ்-இன் ஒட்டு மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 6,12,724-ஐ தாண்டியுள்ளது. இது முந்தைய காலாண்டில் இருந்ததை விட அதிகமாகும். இந்த ஆண்டு முதல் பாதியில் 11,000-த்திற்கும் மேல் பணியமர்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications