சைலென்டாக மாஸ் காட்டும் டிசிஎஸ், இன்போசிஸ்.. இங்கேயும் நாங்க தான் 'கிங் மேக்கர்'..!

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் இன்போசிஸ், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் புரட்சி செய்து வருகின்றன. ஏஐ தொழில்நுட்பத்தால் பலரும் வேலைவாய்ப்புகளே இழந்து வருவதாக இந்திய டெக் துறையில் கருத்து நிலவரும் வேளையில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஏஐ துறையில் வேகமாக முன்னேறி வருவது புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

இதேபோல் ஏஐ துறையின் எழுச்சியின் காரணமாக டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் ஆகியவை படிப்படியாக வர்த்தகத்தை இழக்கும் என கூறப்பட்டு வரும் வேளையில் தற்போது ஏஐ துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. இதன் மூலம் ஏஐ தொழில்நுட்பத்திலும் அதிகப்படியான வர்த்தகத்தை பெறழும், அதிகப்படியான வேலைவாய்ப்புகளையும் உருவாக்க இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் தயாராகியுள்ளது.

 சைலென்டாக மாஸ் காட்டும் டிசிஎஸ், இன்போசிஸ்.. இங்கேயும் நாங்க தான் 'கிங் மேக்கர்'..!

தற்போது பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் பொதுவான ஏஐ சேவையில் இருந்து விலகி ஒரே-நோக்கம் கொண்ட ஏஜென்டிக் ஏஐ (Agentic AI) மாதிரிகளுக்கு மாறுவதால் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் இதற்கு அதிகப்படியான முக்கியதுவம் அளித்து வருகிறது.

இதற்காக டிசிஎஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு உலக தரம் வாய்ந்த ஏஐ அடிப்படையிலான சேவையை வழங்க சுமார் 150 ஏஐ ஏஜென்ட்களை தனிப்பட்ட முறையில் உருவாக்கியுள்ளது. இதேவேளையில் டிசிஎஸ்-ன் முதல் இடத்திற்கு போட்டிப்போடும் இன்போசிஸ் சுமார் 100 ஏஜென்ட்களையும் உருவாக்கியுள்ளன. இந்த மாற்றம், ஐடி துறையில் ஏஐ துறையில் புதிய சக்தியை கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.

இன்போசிஸ் ஏஐ உத்திகள்: இன்போசிஸ் தற்போது தனது வர்த்தகத்தை மொத்தமாக, "ஏஐ முதன்மை" (AI-First) உத்தியைப் பின்பற்றி வழிநடத்தி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு விரைவாக ஏஐ தொழில்நுட்ப சேவைகளை வழங்குகிறது. இதற்காக இன்போசிஸ் உருவாக்கிய பிரத்தியேக தளம் தான் இந்த டோபாஸ் (Topaz). டோபாஸ் தளத்தில் நிறுவன சேவைகள், டேட்டா, மற்றும் கிளவுட் சேவைகளை ஒருங்கிணைத்து, கோட் உருவாக்கம், ஐடி ஆப்ரேஷன்ஸ், மற்றும் பணப்பரிவர்த்தனை ஆகியவற்றில் செயல்திறனை மேம்படுத்துகிறது.

டிசிஎஸ் ஏஐ உத்திகள்: டிசிஎஸ் "மனிதர்-பிளஸ்-ஏஐ" (Human-Plus-AI) மாதிரியை மையமாகக் கொண்டு இயங்குகிறது. அதாவது மனித பணியாளர்களுடன் ஏஐ ஏஜென்ட்களை இணைத்து செயல்படும் வகையில் ஒரு வர்த்தக மாடலை உருவாக்கியுள்ளது. இத்தகைய ஏஐ சேவைக்காக டிசிஎஸ் விஸ்டம் நெக்ஸ்ட் (WisdomNext) என்ற பிரத்தியேக தளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவான ஏஐ சேவையை உறுதிசெய்கிறது. மேலும், டிசிஎஸ் கிளவுட் உள்கட்டமைப்பு மற்றும் ஏஐ டேட்டா சென்டர்களில் அதிகப்படியான முதலீட்டை செய்கிறது.

ஏஐ பூதம்.. ஐடி ஊழியர்கள் அச்சம்..!: ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, ஐடி ஊழியர்களிடையே வேலை இழப்பு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை வெல்ல, ஊழியர்கள் பின்வருவனவற்றை பின்பற்றலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

  • ஏஐ மற்றும் தரவு பகுப்பாய்வு (Data Analytics) பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
  • டிசிஎஸ் மாதிரியைப் போல, ஏஐ கருவிகளை உங்கள் பணியில் ஒரு உதவியாளராகப் பயன்படுத்துங்கள்.
  • ஏஐ உருவாக்கும் புதிய பணி வாய்ப்புகளை, குறிப்பாக சைபர் பாதுகாப்பு மற்றும் கிளவுட் துறைகளில், பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வேலை இழப்பு பயத்தை தவிர்க்க, தொடர்ச்சியான கற்றல் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுதல் முக்கியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ், ஏஜென்டிக் ஏஐ மூலம் ஐடி துறையை மாற்றி வருகின்றன. டிசிஎஸ் மனித-ஏஐ ஒருங்கிணைப்பையும், இன்போசிஸ் விரைவான ஏஐ டெக் சேவை டெலிவரியை மேம்படுத்தும். ஐடி ஊழியர்கள், ஏஐ பயத்தை வெல்ல புதிய திறன்களைக் கற்று, தொழில்நுட்பத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டிய காலத்தின் அவசியமாக மாறியுள்ளது.

இந்த மாற்றங்கள், உலகளாவிய ஐடி துறையில் இந்தியாவின் பங்கை தொடர்ந்து வலுப்படுத்தும் என்பது தான் தற்போதைய நிலையில், இந்த வலிமை அடுத்த சில வருடத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+