இந்திய IT துறை புதிய கட்டத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. அதன் படி நிறுவனங்களுக்கு ஜென் AI தொழில்நுட்பத்தை முன்னனணி IT நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த கட்டுரையில், இந்திய IT நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் விப்ரோ (Wipro) ஆகியவை அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஜென் AI தயாரிப்புகள் மற்றும் அவற்றின் திறன்கள் பற்றி காண்போம்.
ஜூன் மாதத்தில், இந்தியாவின் மிகப்பெரிய IT தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் விஸ்டம் நெக்ஸ்ட் (WisdomNext) என்ற AI மற்றும் விப்ரோ நிறுவனம் Wipro Lab45 என்ற AI-ஐ அறிமுகப்படுத்தியது. மேலோட்டமாக பார்த்தால் இரண்டுமே வேறுபட்டவையாக இருந்தாலும், இவை இரண்டும் IT சேவைகளுக்கு ஒரே மாதிரியாகதான் உதவும் என்று தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் WisdomNext இப்போதைக்கு முன்னணியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Wisdom next என்பது Vertex AI, OpenAI, watsonx மற்றும் Amazon Web Services (AWS) போன்ற பல AI மாடல்களை ஒரே இன்டர்ஃபேசில் இயக்கக்கூடிய தளமாகும். மேலும், பல்வேறு துறைகளுக்கான வரைபடங்கள் போன்றவற்றை இந்த ஜென் AI கொண்டு உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், தங்களின் தேவைக்கேற்ப வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்போது வளர்ச்சி பெற்று வரும் ஜென் AI தொழில்நுட்பம், பழைய டேட்டாக்களைப் பயன்படுத்தி புதிய வகையான டேட்டாக்களை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறது. இவை எழுத்து, ஒலி, காணொளி, படங்கள் அல்லது கணினி குறியீடுகள் என எந்த வடிவத்திலும் இருக்கலாம்.
இது வணிக நிறுவனங்களுக்கு பல்வேறு பயன்களை அளிக்கிறது. குறிப்பாக, பணிகளை ஆட்டோமேட்டிக் முறையில் செயல்படுத்துதல், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துதல் மற்றும் புதுமையான டேட்டாக்களை உருவாக்குதல் போன்றவற்றில் உதவியாக இருக்கும். இதன்மூலம், நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஜென் AI தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது.
OpenAI அதன் பிரபலமான சாட்போட்டான ChatGPT-ஐ 2022-ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தியது. இதன் காரணமாகவே ஜென் AI வளர்ச்சி தொடங்கியது. அதன் பின் பல நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுடனான உரையாடல்களுக்கு ஜென் AI தொழில்நுட்பம் பெரிதும் உதவியதாக கூறியுள்ளனர்.
டிசம்பர் மாதம் வெளியான EY இந்தியா அறிக்கையின்படி, அடுத்த 7 வருடங்களில் ஜென் AI தொழில்நுட்பம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் $1.2 - $1.5 லட்சம் கோடி டாலர்கள் வரை கூடுதலாக சேர்க்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம், 2030-ஆம் நிதி ஆண்டில் மட்டும், அடிப்படை மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட $ 359 - $438 பில்லியன் டாலர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகளாவிய வணிக ஆராய்ச்சி ஆலோசனை நிறுவனமான HFS ரிசர்ச்சின் நிறுவனர் Phil Fersht கருத்துப்படி, சமீப காலமாக TCS நிறுவனம் ஜென் AI தொழில்நுட்பத்திற்காக அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. மேலும் மூத்த நிர்வாகிகளை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் விப்ரோ ஆகிய இந்திய IT நிறுவனங்கள், ஜென் AI போரில் யார் முன்னேறுவார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. TCS AI WisdomNext தற்போது முன்னிலையில் இருந்தாலும், Wipro Lab45 வேகமாக வளர்ந்து வருகிறது. இறுதியில், வாடிக்கையாளர்களின் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் தளமே வெற்றி பெறும். அதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications