கொரோனாவுக்கு பின் மொத்தமும் மாறிடுச்சு.. என்பதை ஐடி துறையில் இருக்கும் பெண் ஊழியர்கள் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ-க்கு உணர்த்தி வருகின்றனர்.
மார்ச் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஆண் ஊழியர்களை காட்டிலும் பெண் ஊழியர்கள் அதிகளவில் பணியை ராஜினாமா செய்தனர். இந்த காலக்கட்டத்தில் தான் டிசிஎஸ் நிர்வாகம் அனைத்து ஊழியர்களையும் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டது.

வொர்க் ப்ரம் ஆபீஸ் அறிவிப்புக்கும், பெண் ஐடி ஊழியர்களின் அதிகப்படியான ராஜினாமா-வுக்கும் தொடர்பு உள்ள நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. CFA அமைப்பு சுமார் 134 நிறுவனத்தில் செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படைியில் இந்திய ஐடி துறையில் பெண்களின் பங்கீடு சுமார் 30 சதவீதமாக உள்ளது, டிசிஎஸ் நிறுவனத்தில் 35 சதவீதம்.
பெண்களின் பங்கீடு வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி மிகவும் முக்கியமானதாக இருக்கும் வேளையில் பெண்களுக்கான சிறப்பு hybrid model கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் என நிலைமை தற்போது உருவாகியுள்ளது. இது மட்டும் அல்லாமல் இதை ஐடி நிறுவனங்கள் உருவாக்காத பட்சத்தில் அதிகப்படியான பெண் ஐடி ஊழியர்களை இழக்க வேண்டிய நிலை உருவாகும்.
வொர்க் ப்ரம் ஆபீஸ் கட்டாயமாக்கப்பட்ட பின்பு 33 -55 வயதுடைய பெண்கள் ஹைப்ரிட் வொர்க் சலுகை கொடுக்கப்பட்ட நிலையிலும், அலுவலகத்திற்கு வர அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இதேபோல் சிலர் ஹைப்ரிட் மாடலை சரியாக பின்பற்ற முடியாத நிலையும் ஏற்படுகிறது.
இதுகுறித்து செய்யப்பட்ட பிரத்தியேக ஆய்வில் பெண்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் போது அலுவலகம் மற்றும் வீட்டு பணி சுமை இரண்டும் சேர்கிறது. இதனால் அவர்களுக்கான personal மற்றும் professional time இல்லாமல் பணி நேரத்தை அதிகளவில் விரிவாக்கம் அடைந்து mental health கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது நீண்ட கால அடிப்படையில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும்.
இதில் இருந்து தப்பிக்க பெண் ஐடி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுவதை விரும்பினாலும் Work from Home மற்றும் Work From Office கொள்கையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கும் போது பெண்களின் செயல்திறன் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. இதை சரி செய்ய குறைந்தபட்சம் பெண்களுக்கு ஹைப்ரிட் மாடலில் கணிசமான மாற்றங்களும் இலகு தன்மையையும் கொண்டு வர வேண்டிய கட்டாயம் உள்ளது என இந்த ஆய்வுகள் கூறுகிறது.
Work from Homes மற்றும் Work From Office கொள்கையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதை தொடர்ந்து இன்றைய காலக்கட்டத்தில் அதிகப்படியான பெண் ஊழியர்கள் தங்களுடைய பணியை ராஜினாமா செய்வதில் தயங்குவது இல்லை. இதன் பின்விளைவுகளை டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்கள் தான் எதிர்கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications