இந்தியாவின் பல முன்னணி ஐடி நிறுவனங்களும் தங்களது அலுவலகங்களை திறக்க தொடங்கியுள்ளன. நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் இன்று முதல் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய கூறியுள்ளது.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் கூட தொடங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கடந்த சில காலாண்டுகளாகவே, ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில், தற்போது அவர்களை அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
நெகிழ்வு முறையில் பணி
ஆக இதன் மூலம் தொடர்ச்சியாக 19 மாதங்களாக வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்த ஊழியர்கள், இன்று முதல் அலுவலகம் திரும்ப தொடங்கியுள்ளனர். எனினும் தற்போதைக்கு நெகிழ்வான முறையில் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு திரும்புவர். ஆக அந்த குழுவின் தலைவர்கள், தேவையை பொறுத்து இது அமையும் என்று டிசிஎஸ் நிறுவனம் கூறியுள்ளது. .
25/25 திட்டம்
மேலும் டிசிஎஸ் இது குறித்தான அறிக்கையில் நாங்கள் 25/25 மாதிரியில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது. இந்த 25/25 மாடல் என்பது 25 ஊழியர்கள் மூத்த ஊழியர்கள் அலுவலகம் வந்தால் போதும். அதுவும் 25% நேரம் மட்டும் அலுவலகத்தில் இருந்தால் போதும் என்று கூறப்பட்டது.
நெகிழ்வு தன்மை
இந்த 25/25 திட்டத்தினை 2025ம் ஆண்டுக்குள் முழுக்க செய்ய திட்டமிட்டுள்ளது. இது ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வு தன்மையை அளிப்பதுடன், ஊழியர்கள் அலுவலகத்திற்கும் ஊழியர்கள் வருவார்கள். வீட்டில் இருந்தும் பணிபுரிவார்கள்.
இது ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதோடு, நிறுவனத்தின் லாபத்தினையும் அதிகரிக்க வழிவகுக்கும்.
மொத்த ஊழியர்கள் எவ்வளவு?
கடந்த வாரத்தில் மொத்த ஊழியர்களில் 5% பேர் மட்டுமே அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மொத்த ஊழியர்கள் சுமார் 5,28,748 ஊழியர்கள் உள்ளனர்.
கடந்த அக்டோபரில் டிசிஎஸ் நிறுவனம் அதன் ஊழியர்களில் 70% பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதால், 95% பேர் கோவிட் தடுப்பூசியின் முதல் கட்ட தடுப்பூசியையாவது போட்டுக் கொண்டுள்ளனர். ஆக அவர்கள் விரைவில் அலுவலகம் திரும்புவார்கள் என்று கூறியது.
நாஸ்காம் என்ன கூறியது?
இது குறித்து நாஸ்காம் அறிக்கையின் படி வாரத்தில் ஐந்து நாட்கள் பணிக்கு பதிலாக, இனி வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகம் திரும்ப கொண்டு வருவதில் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. முதல் கட்டமாக 25 வயதிகுட்பட்பட்டவர்கள் நவம்பருக்குள் திரும்புவார்கள். அதற்கு மேற்பட்டவர்கள் படிப்படியாக திரும்புவார்கள் என கூறியிருந்தது.
முழு லாக்டவுன்
கடந்த ஆண்டில் கொரோனாவினை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில், பல முன்னணி ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறி வந்தன. ஒரு கட்டத்தில் பல சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் இதனை கட்டாயமாக்கலாம் என்று கூட கூறி வந்தன.
ஊழியர்களுக்கு அழைப்பு
அதன் பின்னர் பகுதி நாட்கள் அலுவலகத்திலும், சில நாட்கள் வீட்டில் இருந்தும் பணிபுரியும் பிளெக்ஸி முறையை நிரந்தமாக செய்யலாம் என கூறி வந்தன. இந்த நிலையில் இந்தியாவினை பொறுத்தவரையில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில் தற்போது ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் தொடங்கியுள்ளன.
இன்ஃபோசிஸ் திட்டம்
நாட்டின் மற்றொரு முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் ஜூன் காலாண்டு முடிவில் 2.67 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ளன. இது கடந்த மார்ச் காலாண்டில் 2.59 லட்சம் ஊழியர்களை கொண்டிருந்தது.
இன்ஃபோசிஸ் நிறுவனமும் காலாண்டு அறிக்கையினை வெளியிடும்போது, அதன் ஊழியர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில் ஹைபிரிட் மாதிரியை பின்பற்றபோவதாக தெரிவித்து இருந்தது.
விப்ரோவின் திட்டம்
விப்ரோ நிறுவனம் அதன் மூத்த ஊழியர்களை செப்டம்பர் மாதத்தில் வர கூறியிருந்தது. அதன் ஊழியர்களில் 85% பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும், 50% பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் தலைவர் ரிசாத் பிரேம்ஜி கூறியிருந்தார்.
ஹெச் சி எல்லின் திட்டம்
ஹெச் சி எல்லின் 90% ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் முழு தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளனர். அவர்களை அலுவலகம் வரக்கூறியும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications