இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்கள் வேலையைத் தேடுவதை விட்டுவிட்டு தங்களுக்கென சொந்தத் தொழிலை தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்குக் காரணம் தாங்களே சம்பாதிப்பதும் வேலைப்பளு, அழுத்தம் இல்லலாததுதான்.
இருப்பினும் போதிய முதலீடு இல்லாததால் சொந்தமாக நிறுவனத்தை தொடங்க அவர்களால் முடியவில்லை. இதனால் பெரும்பாலான மக்கள் தங்களது சுயதொழிலை தொடங்க முடியாமல் போய் விடுகிறது. இந்த நிலையில் ஒரு அற்புதமான தொழில் ஐடியா உள்ளது.

வெறும் ரூ.5000 முதல் ரூ.10000 முதலீடு செய்து சுய தொழிலைத் தொடங்கி நல்ல லாபத்தை அந்த ஐடியா பெற்றுத் தரும். அது எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியர்களால் காலை எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிக்காமல் இருக்க முடியாது. அது அவர்களது வாழ்க்கையில் இணைந்து விட்ட பழக்கங்களில் ஒன்றாகிவிட்டது. டீ என்பது அன்றாடம் நாம் குடிக்கும் ஒரு பானமல்ல. அது நம் உணர்வோடு கலந்த அற்புதமான விஷயமாகும்.
ஒவ்வொரு மனிதருடனும் டீ-யானது ஏதாவது ஒரு வகையில் இணைந்திருக்கும். பலருக்கு அவர்களது மன அழுத்தத்தைக் குறைக்கும் அரிய மருந்தாகவும் உள்ளது. காபி மற்றொரு விருப்பமாக இருந்தாலும் மக்கள் விருப்பத்தில் காபியை ஒப்பிட்டால் ஒரு கப் காபிக்கு இந்தியர்கள் ஒரு நாளைக்கு 30 கப் டீ குடிப்பதாகத் தெரியவந்துள்ளது.
சிலர் காலையில் மட்டுமல்லாமல் மாலையிலும் டீயை அருந்துகின்றனர். சிலர் நாள் முழுவதும் குடிக்கின்றனர். ஆய்வுகளின்படி ஒரு சராசரி இந்தியர் தினமும் இரண்டு கப் டீயாவது குடிக்கின்றார். இந்த எண்ணிக்கை பருவ காலத்துக்கும் அவரது மனநிலைக்கும் ஏற்ப அதிகரிக்கலாம். இதனால் தான் டீ தொழில் மிகவும் லாபகரமானதாக தோன்றுகிறது. அத்துடன் சிறிய முதலீட்டில் பெரிய லாபத்தையும் இந்தத் தொழில் பெற்றுத் தருகிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் டீ உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மொத்தத்தில் இந்தியாவில் உற்பத்தியாகும் டீயில் 70 சதவீத டீ உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது. அஸ்ஸாம், டார்ஜிலிங் போன்ற டீ வகைகள் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளன.
பல நவீன தொழில்நுட்பகங்கள் மூலம் ஏராளமான டீ உற்பத்தி நிறுவனங்கள் நாட்டில் பெருகிவிட்டன. 1800 - 1947 ஆண்டுகாலத்தில் பிரிட்டிஷார் பெருமளவில் டீ சாகுபடியில் ஈடுபட்டனர். டீயை அவர்கள் முதலில் இந்தியாவில் தான் பார்த்தனர். வாரன் ஹேஸ்டிங்ஸ், ஜார்ஜ் போக்லே என்பவருக்கு சீனாவிலிருந்து தருவித்த டீ விதைகளை தந்து கடந்த 1774 ஆம் ஆண்டில் சாகுபடி செய்ய அனுமதித்தார்.
ஆனால் அதனால் ஒரு பலனும் இல்லை. பின்னர் சர் ஜோசப் பேங்க்ஸ் என்பவர் டீ பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டார். 1776 ஆம் ஆண்டு அவரது அறிவுரைப்படி இந்தியாவில் டீ சாகுபடி நடைபெற்றது.
தேயிலை தொழிலை தொடங்குவதற்கு 5 முதல் 10 ஆயிரம் மூலதனம் மட்டுமே தேவைப்படுகிறது. இந்தத் தொழிலுக்கு பன்முகத் தன்மை உள்ளது. சில்லறை மற்றும் மொத்த வியாபாரமாக டீயை விற்கலாம். எடைக்கணக்கிலும் டீயை விற்கலாம்.
பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது உதிரி டீயை விற்பதற்கு ஃப்ரான்சைஸ் வழங்குகின்றன. இந்த ஃப்ரான்சைஸ் மூலம் சிறிய முதலீட்டில் விற்பனை கமிஷன் மூலம் நல்ல ஆதாயம் பெறலாம்.
முதல் நாள் ஒன்றுக்கு 10 கிலோ டீ என்று ஆரம்பித்து விற்கலாம்.
இதன் மூலம் ரூ.600 தினசரி சம்பாதிக்கலாம். இதேவழியில் நீங்கள் 15 முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை மாதாமாதம் சம்பாதிக்கலாம். அதேவேளையில் சில மாதங்களில் உங்களது தொழில் வளர்ச்சியடையும் நிலையில் தினசரி 30 முதல் 50 கிலோ டீ வரை விற்று 1800 முதல் 3000 ரூபாய் வரை லாபத்தை பெறலாம்.
இதெல்லாம் கஷ்டம் என நீங்கள் நினைத்தால் டீ விற்பனையில் தற்போது பல பிராண்டுகள் பிரான்சைஸ் கொடுக்கிறது, இதை எளிதாக தேர்வு செய்துக்கொள்ளலாம். ஆனால் இதற்கு சற்று கூடுதல் செலவாகும் அதாவது முதலீடு தேவைப்படும்.


Click it and Unblock the Notifications