யாரையும் விட்டுவைக்காத கொரோன டீ எஸ்டேட் நிறுவனங்களை மட்டும் விட்டுவைக்குமா என்ன. உலகளவில் தற்போது நேரடியாகவோ, மறைமுகமாகவோ கொரோனா அனைத்து தரப்பு மக்களையும், வர்த்தகத்தையும், உற்பத்தியையும், சேவையையும் பாதித்துள்ளது என்றால் மிகையில்லை. அந்த அளவிற்கு கொரோனா எல்லோரையும் பயமுறுத்தி வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் கொரோனாவின் தாக்கத்தால் இந்திய டீ எஸ்டேட் நிறுவனங்கள் சுமார் 2000 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை சந்திக்க உள்ளது.
ரூ.2,000 கோடி ரூபாய்
கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் அனைத்து உற்பத்தி ஆலைகள், தொழிற்துறைகள், சேவை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக டீ எஸ்டேட்களும் நாட்டின் அனைதது பகுதிகளிலும் முடங்கியுள்ளது. இதனால் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 2000 கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் ஏற்படும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது.
21 நாள் லாக்டவுன்
முதலில் ஒரு நாள் மத்திய அரசு ஊரடங்கு விதித்த போதும் இந்தியாவில் அனைத்து டீ எஸ்டேட்களும் சிறப்பான முறையில் இயங்கிய குறிப்படத்தக்கது. பல இடங்களில் நோய் தொற்றுக் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் எந்த பிரச்சனையும் இல்லை என மக்களும், டீ எஸ்டேட் உரிமையான நினைத்த வேளையில் தான் பிரதமர் மோடி 21 நாள் லாக்டவுன் அறிவித்தார்.
100 சதவீத முடக்கம்
21 நாள் லாக்டவுன் அறிவித்த பிறகு அனைத்து எஸ்டேட்களும் வேறு வழியே இல்லாமல் பணிகளை நிறுத்தியது. இதனால் உற்பத்தி பெரிய அளவில் குறைந்தது நாட்டின் மொத்த டீ தயாரிப்பு நிறுவனங்கள் முடங்கியது.
இந்தியா
தற்போது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1422 டீ எஸ்டேட் மற்றும் 2,50,000 சிறு குறு டீ விவசாயிகளும் உற்பத்தியை ஊழியர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளனர்.
10 கோடி கிலோ
இதுமட்டும் அல்லாமல் இந்தியா மற்றும் வெளிநாட்டிலும் டீ தேவை அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் டீ தேவையும் குறைந்துள்ளது.
இதனால் 10 கோடி கிலோ டீதூள் தற்போது சந்தையில் அளவிற்கு அதிகமாக தேக்கம் அடைந்துள்ளது. இதன் மதிப்பு மட்டும் 2000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications