கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் மலர் வளர்ப்பில் தனி சாதனையை படைத்து வரும் லத்திகா சுதன் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்க உள்ளோம். இவர் தனது வீட்டில் கிட்டத்தட்ட 100 தாமரை வகைகளை வளர்த்து வருகிறார். இதன் மூலம் மாதத்திற்கு 40,000 ரூபாய் வருமானமும் ஈட்டி வருகிறார். அப்படி அவர் என்ன செய்கிறார்? எப்படி வருமானம் கிடைக்கிறது? என்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.
லத்திகா தனது வீட்டில் கிட்டத்தட்ட நூறு தாமரை வகைகள் மற்றும் 80 நீர் அல்லி வகைகளை சேகரித்து வளர்த்து வருகிறார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பழங்கால மேப்பில் இலை மற்றும் 1000 இதழ்கள் கொண்ட தாமரை போன்ற அரிய தாமரை வகைகளையும் வளர்க்கிறார். இவை கேரளாவிலேயே முதன் முறையாக தனது தோட்டத்தில் பூத்ததாக பெருமையுடன் கூறுகிறார் இந்த பெண்மணி.

இவருடைய சாதனை பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. தாமரைகள் பொதுவாகவே பலருக்கும் பிடித்த பூ. இவருடைய வீட்டில் மலரும் இந்த தாமரையை பற்றி கேள்விப்பட்டதும் ஏராளமான ஆர்வலர்கள் லத்திகாவின் வீட்டு வாசலில் குவிந்தனர்.
"தாமரை பற்றி தெரிந்து கொள்ள பலரும் என்னை தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். செடிகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ள நபர்களுக்கு தாமரைக் கிழங்குகளை கொடுக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் தோன்றியது அதை ஏன் வியாபாரமாக செய்யக்கூடாது? என்று. அதிலிருந்து தொடர்ந்து தாமரை கிழங்குகளை விற்பனை செய்ய ஆரம்பித்தேன்" என்று லத்திகா கூறியுள்ளார்.
தனது தாமரைப் பூக்கள் மீதான ஆர்வத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்தி தனது பொழுதுபோக்கை லாபகரமான தொழிலாக மாற்றி உள்ளார் லத்திகா. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 51 வயதான இவர் 40,000 ரூபாய் வரை வருமானம் பெறுகிறார்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்த லத்திகா தற்போது தாமரைத் தோட்டம் அமைத்து தொழில் முனைவோராக மாறியுள்ளார். தோட்டக்கலை மீதான லத்திகாவின் ஆர்வம் அவருடைய குழந்தை பருவத்திலிருந்தே இருந்து வருகிறது. தாவரங்களை வளர்ப்பதும், அதன் வளர்ச்சியை கண்டு அளவற்ற மகிழ்ச்சி கொள்வதும் என தனது குழந்தை பருவத்தை கடந்துள்ளார் லத்திகா. அவர் தனது 20-வது வயதின் முற்பகுதியில் ஒரு தொடக்க அரசு பள்ளி ஆசிரியராக சென்றாலும் அவரின் தோட்டக்கலை மீதான ஆர்வம் குறையவே இல்லை.
எனவே லத்திகா படிப்படியாக வீட்டில் தாமரை மற்றும் நீர் அல்லிகளை வளர்ப்பதற்கான எளிய முறைகளை கற்றுக்கொள்வதில் அதிக நேரத்தை செலவழிக்க தொடங்கினார். நாடு முழுவதும் உள்ள நர்சரிகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கன்றுகளை இதற்காக வாங்க ஆரம்பித்தார். வீட்டில் தாமரை மற்றும் இளநீர் வளர்ப்பது பற்றிய ஆழமான புரிதலைப் பெற, லத்திகா மாவட்டத்தில் விவசாயத் துறையால் நடத்தப்பட்ட ஏராளமான பட்டறைகள் மற்றும் வகுப்புகளில் கலந்து கொண்டார்.
லத்திகா தனது தோட்டத்தில் தாமரை வளர்ப்பதற்கு இயற்கை உரத்தையும் பயன்படுத்துகிறார். முட்டை ஓட்டின் தூள், சில நேரங்களில் டி அம்மோனியம் பாஸ்பேட் ஆகியவற்றை பயன்படுத்துகிறார். ரசாயன உரங்களை விட சூரிய ஒளி நீர் மற்றும் தரமான மண்ணின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு செடிகளை வளர்த்து வருகிறார். லத்திகா ஒவ்வொரு மாதமும் 150 தாமரை நாற்றுகள் முதல் 100க்கும் மேற்பட்ட நீர் அல்லி விதைகள் வரை விற்பனை செய்கிறார். மருத்துவமனைகள், ஹோட்டல்கள் என பலவற்றுக்கும் மொத்தமாக ஆர்டர்களை பெற்று விற்பனை செய்து வருகிறார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications