ஜனவரி 08 உஷாரா இருங்க மக்களே..! கொந்தளிப்பில் வர்த்தக யூனியன்கள், வங்கி அதிகாரிகள், அரசு ஊழியர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நரேந்திர மோடியும், உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்து நிர்வகித்து வரும் பாஜக 2.0, பல அதிரடி திட்டங்களைக் அமல்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

சமீபத்தில் தீ பிடித்து எரிந்து கொண்டு இருக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு என அணு குண்டுகளை எரிந்து கொண்டு இருக்கிறார்கள். அதற்கு மக்களும் தங்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆனால் இப்போது, இந்த ஒரு சட்டத்தால், மக்களை தாண்டி, வர்த்தக யூனியன்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வரை கொந்தளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

மோடி அரசை எதிர்த்து போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் RSS-ன் பாரதிய மஸ்தூர் சங்கம்!மோடி அரசை எதிர்த்து போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் RSS-ன் பாரதிய மஸ்தூர் சங்கம்!

அந்த சட்டம்...

அந்த சட்டம்...

மோடி அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் தான் அந்த புதிய அணு ஆயுத வெடி குண்டு. இந்தியாவில் தொழிலாளர்களுக்கு சுமாராக 44 சட்டங்கள் இருக்கின்றன. இந்த 44 சட்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து, வெறும் 4 பிரிவுகளாக மட்டும் பிரித்து புதிய சட்டங்களைக் கொண்டு வருவதாக கடந்த ஜூலை 2019-ல் சொல்லி இருந்தார்கள். இந்த தொழிலாளர் சட்ட மாற்றங்கள், அந்நிய நேரடி முதலீட்டாளர்களை கவரும் எனவும் சொல்லி இருந்தார்கள்.

நிறைவேற்றம்

நிறைவேற்றம்

இந்தியாவில் இருக்கும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான புதிய தொழிலாளர்கள் சட்டங்களைக் கொண்டு வந்து இருக்கிறது மத்திய அரசு. இந்த புதிய சட்டங்கள் முழுக்க முழுக்க அடிமைத் தனத்தைத் தான் திணிக்கிறது என உரக்கச் சொல்லி இருக்கிறது வர்த்தக யூனியன்கள். இந்த புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து தான், வரும் ஜனவரி 08-ம் தேதி பாரத் பந்த்-க்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.

 வர்த்தக அமைப்புகள்

வர்த்தக அமைப்புகள்

AITUC, HMS, CITU, AIUTUC, SEWA, AICCTU, LPF, UTUC போன்ற 10 வர்த்தக யூனியன்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகள் நாடு தழுவிய பாரத் பந்த்-க்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். சமீபத்தில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர், வர்த்தக யுனியன்களை அழைத்துப் பேசி இருக்கிறார்.

10 யூனியன்கள் ஸ்டேட்மெண்ட்

10 யூனியன்கள் ஸ்டேட்மெண்ட்

இந்த கூட்டத்தில், நீண்ட நாட்களாக, தொடர்ந்து வர்த்தக யூனியன்கள் மற்றும் தொழிலாளர் நலம் சார்ந்து இயங்கும் அமைப்புகள், வலியுறுத்தி வரும் வேலை இல்லா திண்டாட்டம், குறைந்தபட்ச கூலி, சமூக பாதுகாப்பு போன்ற 14 கோரிக்கைகளில் ஒன்றுக்குக் கூட, மத்திய தொழிலாளர் நலத் துறை முறையாக பதில் கொடுக்கவில்லை என வர்த்தக 10 வர்த்தக யூனியன்கள் இணைந்து வெளியிட்ட ஸ்டேட்மெண்டில் சொல்லி இருக்கிறார்கள்.

வங்கியும் இணைகிறது

வங்கியும் இணைகிறது

All India Bank Employees' Association (AIBEA), All India Bank Officers Association (AIBOA), Bank Employees Federation of India (BEFI),Indian National Bank Employees Federation (INBEF), Indian National Bank Officers Congress (INBOC) and Bank Karmachari Sena Mahasangh (BKSM) என பல அனைத்து இந்திய வங்கிகள் சங்கங்களும் களத்தில் இறங்கி இருக்கின்றன.

இவர்களும் இணையலாம்

இவர்களும் இணையலாம்

இந்த வங்கிகள் சங்கங்கள் மட்டும் இல்லாமல், இந்தியாவில் இருக்கும் மத்திய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமபுற வங்கிகள், லைஃப் இன்சூரன்ஸ் கார்பப்ரேஷன் என்று சொல்லப்படும் எல்ஐசி போன்றவர்களும் இந்த பாரத் பந்தில் பங்கு எடுக்க வாய்ப்பு இருப்பதாக மணி கண்ட்ரோல் வலை தளம் சொல்லி இருக்கிறது.

ஒருங்கிணைப்பு

ஒருங்கிணைப்பு

நிதி சார்ந்த நிறுவனங்கள் தவிர, அரசு ஊழியர்களான ரயில்வே பணியாளர்கள், ஸ்டீல் தொழிலாளர்கள், அரசு பாதுகாப்பு உற்பத்தித் துறையில் பணி புரிபவர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களும் இந்த பாரத் பந்தில் பங்கு பெறலாமென மணி கண்ட்ரோல் வலை தளம் தன் செய்தியில் குறிப்பிட்டு இருக்கிறது.

நிதி நிறுவனங்கள்

நிதி நிறுவனங்கள்

மோடி அரசின் புதிய தொழிலாளர் நலச் சட்டங்களை எதிர்த்தும், வங்கிகள் சீரமைப்பு என்கிற பெயரில், அரசு வங்கிகளை இணைப்பதை எதிர்த்தும், வங்கிகள் மற்றும் எல்ஐசி போன்ற நிதி நிறுவனங்கள், இந்த ஜனவரி 08-ம் தேதி பாரத் பந்தில் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.

உஷார் மக்களே

உஷார் மக்களே

கிட்டத் தட்ட வர்த்தக யூனியன்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினர்களும் இந்த பாரத் பந்தில் பங்கு எடுக்க இருப்பதால் அன்றாட வாழ்க்கை கொஞ்சம் பாதிக்கப்படலாம். எனவே வங்கி சார்ந்த வேலைகளை ஜனவரி 08 பாரத் பந்துக்கு தகுந்தாற் போல முன் கூட்டியே முடித்துக் கொள்ளுங்கள் மக்களே..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: bjp பாஜக
English summary

teachers govt employees bank employees may participate in jan 8 bharat bandh

The trade union called for a bharat bandh on Jan 08th 2020. The Teachers, government employees, Bank employees may participate in the bharat badh against modi governments new workers policy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X