2023ல் டெக் ஊழியர்களைக் கலங்க வைத்த பணிநீக்கம் 2024ல் குறையும் எனப் பார்த்தால், சிறுசு முதல் பெருசு வரையில் பல நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்கத்தை அறிவித்து வருகிறது. இதில் முக்கியமாகச் சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகுள் நிறுவனத்தின் பணிநீக்கம் பலரையும் பயமுறுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
2024 இல் பணிநீக்கங்கள் தொடரும் வேளையில், ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட்அப் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டில் கடந்த 22 நாளில் 48 தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுவரை 10,963 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன.

கூகுள் மற்றும் அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் செலவுகளைக் குறைக்க அதிக வேலைகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளன. இதிலும் குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் பல வேலைவாய்ப்புகள் ஆட்டோமேட் செய்யப்பட்டு உள்ளது.
2024 ஆம் ஆண்டில் Riot Games, Google, Amazon Audible, Amazon Prime Video, Twitch, Discord, Unity Software, Xerox மற்றும் Frontdesk ஆகியவை டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்த முக்கியத் தொழில்நுட்ப நிறுவனங்களாகும்.
2023ல் சுமார் 1150 நிறுவனங்கள் சுமார் 2,60,000 பேரை பணிநீக்கம் செய்தது மறக்க முடியாது. இதனால் அமெரிக்காவில் வருடம் முழுவதும் வெறும் 700 பேருக்கு மட்டுமே புதிதாக ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், AI பயன்பாடு ஆகியவற்றின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.
இந்தியாவில் பெரிய அளவிலான பணிநீக்கம் செய்யப்படாவிட்டாலும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாமல் இருப்பது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அடுத்த சில மாதத்தில் பல லட்சம் மாணவர்கள் பட்டம் பெற்று கல்லூரியை விட்டு வெளியே வரும் வேளையில் இன்போசிஸ் உட்படப் பல நிறுவனங்கள் பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்க விருப்பம் இல்லையெனக் கூறியுள்ளது.
மேலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குப் புதிய முதலீடுகள் பெற முடியாமல் இருப்பது கூடுதல் தலைவலியாக உள்ளது. இது அமெரிக்காவில் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டியை பெரிய அளவில் குறைத்து அதிகப்படியான டிமாண்ட் உருவானால் மட்டுமே நடக்கும்.
இந்தியாவில் டாப் 5 ஐடி சேவை நிறுவனங்களிலும் எப்போதும் வருவாய், லாபம், வேலைவாய்ப்பு அளவுகள் ஏறுமுகத்திலேயே இருந்த காலம் போய் இப்போது மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இதன் எதிரொலியாகச் செப்டம்பர் காலாண்டைப் போலவே டிசம்பர் காலாண்டிலும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகிய டாப் 4 ஐடி சேவை நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் ஒரு துறை ஐடி சேவைத் துறை இன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
டிசம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் 5680 ஊழியர்களையும், இன்போசிஸ் 6101 ஊழியர்களையும், விப்ரோ 4,473 ஊழியர்களையும் குறைந்துள்ளது. ஹெச்சிஎல் நிறுவனத்தில் மட்டும் 3,617 ஊழியர்கள் அதிகரித்துள்ளனர்.
இதைவிடக் கொடுமையான விஷயம் என்னவென்றால் டாப் 4 ஐடி சேவை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வேறு வேலைக்குச் செல்ல முயன்றாலும் சந்தையில் சிறப்பான சம்பளத்தில் வேலைவாய்ப்புக் கிடைப்பது இல்லை என்பது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

50000 ஊழியர்கள் மொத்தமாக பணிநீக்கம்.. உலகின் முன்னணி கார் நிறுவனத்தின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!



Click it and Unblock the Notifications