இந்தியாவின் முன்னணி ஐடி, டெக், டிஜிட்டல் சேவை நிறுவனங்களில் கடந்த சில நாட்களாக உயர் அதிகாரிகள் வெளியேறுவது வடிக்கையாகிவிட்டது. இதனால் CXO பிரிவு ஊழியர்களுக்கான தேவை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது, குறிப்பாக டெக் மற்றும் அதைச் சார்ந்த துறையில் அதிகப்படியான மாற்றங்கள் நடந்து வருகிறது.
இதில் கவனிக்கப்பட முக்கியமான விஷயம் என்னவென்றால் HR பிரிவின் உயர் அதிகாரிகள் எப்போதும் இல்லாமல் அதிகளவில் மாறி வருகின்றனர்.

இந்திய டெக் மற்றும் ஸ்டார்ட்அப் துறையில் அதிகப்படியான பணிநீக்கம், பிரஷ்ஷர்களுக்கான வேலைவாய்ப்புக் குறைப்பு, பிரஷ்ஷர்களுக்குப் போதுமான வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது, உயர் அதிகாரிகள் அதிகளவில் வெளியேறி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் HR உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து பணியை ராஜினாமா செய்தும், புதிய அதிகாரிகள் வருவதும் தற்போது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
பொதுவாக நிறுவனங்களில் ஊழியர்கள் மாறுவது இயல்பாக இருந்தாலும், உயர் அதிகாரிகள், அதாவது ஒரு பிரிவுகள் தலைவர், துணைத் தலைவர், சிஇஏ, CXO அதிகாரிகள் அடிக்கடி மாறுவது கிடையாது. ஆனால் 2023ல் அது எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
உதாரணமாக இன்போசிஸ் HR பிரிவு உயர் அதிகாரியாக இருந்த ரிச்சர்ட் லோபோ ஆகஸ்ட் மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த வேளையில், சில மாதம் பைஜூஸ் நிறுவனத்திற்கு உதவிவிட்டு பின்னர் டெக் மஹிந்திராவில் CPO எனபடும் தலைமை மக்கள் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.
FreshWorks: இதேபோல், சென்னையில் இருந்து உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் ஃப்ரெஷ்வொர்க்ஸ் அதன் HR தலைவர் சுமன் கோபாலன் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். அவருக்குப் பிறகு உடனடியாக ஜோஹன்னா ஜாக்மேன் இப்பதவியில் அமர்த்தப்பட்டார்.
பிளிப்கார்ட்: இந்திய ஈகாமர்ஸ் துறையைப் புரட்டிப்போட்ட Flipkart, அதன் HR தலைவர் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தது. இந்த நிறுவனம் விரைவில் புதிய அதிகாரியின் பெயரை அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Wipro: பிரபல மிட்கேப் ஐடி சேவை நிறுவனமான Mphasis கடந்த ஆண்டு அக்டோபரில் அதன் புதிய உலகளாவிய தலைமை மனித வள அதிகாரியாக அயஸ்கந்த் சாரங்கி என்பவரை நியமித்தது. எம்பாசிஸில் சேருவதற்கு முன்பு அயஸ்கந்த் சாரங்கி, விப்ரோ எண்டர்பிரைசஸில் CHRO ஆகப் பணியாற்றினார்.
Cognizant: இன்போசிஸ் , விப்ரோ நிறுவனத்திலிருந்து அதிகப்படியான ஊழியர்களை ஈர்த்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்ட காக்னிசென்ட்டின் தலைமை மக்கள் அதிகாரி பெக்கி ஷ்மிட் ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்த பிறகு, கேத்ரின் டயஸை என்பவரை அதன் CPO ஆக நியமித்தது.
Infosys: இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மனித வளம் பிரிவின் முன்னாள் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்திச் சங்கர் ஓய்வு பெற்ற நிலையில், மற்றும் இன்ஃபோசிஸ் ஷாஜி மேத்யூவை மனித வள மேம்பாட்டுக் குழுவின் தலைவராக மாற்றினார்.
KPIT: இதேபோல், பொறியியல் சேவை நிறுவனமான கேபிஐடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷாஷ்வத் கே மித்ராவை மனித வளத்துறையின் உலகளாவிய தலைவராக உயர்த்தியது.
கடந்த 10 மாதத்தில் இந்தியத் தொழிற்துறையில் மாபெரும் மாற்றம் நடந்துள்ளது என்பதற்கு இது முக்கியமான சான்று. ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் துறை கடந்த 2 வருடத்தில் எதிர்கொண்ட பிரச்சனைக்கு மத்தியில் உயர் HR ஊழியர்கள் வெளியேறுவது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணம், கடந்த 2 வருடத்தில் ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்ட நிலையில், 2024 முதல் வரும் புதிய வர்த்தக வாய்ப்புகளை விட்டுவிடக் கூடாது என்பதி உறுதியாக இருக்கும் காரணத்தால் அணியை வலிமைப்படுத்தும் நோக்கமாக உயர் அதிகாரிகள் மாறி வருகின்றனர்.
இதேவேளையில் ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிகளவிலான தலைமை மாற்றங்கள் கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்டு உள்ளது. இதன் வாயிலாகவும் இந்த மாற்றம் நடந்துள்ளது.
நீங்களும் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டில் புதிய வேலைக்கு மாறியிருந்தால், மறக்காமல் எந்த நிறுவனம், எந்தப் பணி என்பதைக் கமெண்ட் பண்ணுங்க. அல்லது உங்க நிறுவனத்திலும் இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications