தினமும் 1600 பேர் பணிநீக்கம்.. டெக் ஊழியர்களைப் பயமுறுத்தும் ரிப்போர்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2023 ஆம் ஆண்டில் உலகளவிலான டெக் நிறுவனங்கள் தினமும் 1600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருவதாகப் புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அனைத்து கன்ஸ்யூமர் டெக் நிறுவனங்கள் அனைத்தும் வர்த்தகச் சரிவு காரணமாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் வேளையில், சமீபத்தில் ஆய்வில் இந்தியாவில் 93 சதவீத சிஇஓக்களின் முக்கியப் பணி 2023 ஆம் ஆண்டி செலவுகளைக் குறைப்பது தான் எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தினமும் 1600 ஊழியர்களை டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருவதாக அதிரடி ரிப்போர்ட் வந்துள்ளது.

அடுத்தடுத்துப் பணிநீக்கம்.. திங்கட்கிழமை சோகமான நாளாக மாறியது..! அடுத்தடுத்துப் பணிநீக்கம்.. திங்கட்கிழமை சோகமான நாளாக மாறியது..!

பொருளாதார மந்தநிலை

பொருளாதார மந்தநிலை

உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் ரெசிஷன் குறித்த அச்சம் காரணமாக அனைத்துத் துறை நிறுவனங்களும், மக்களின் செலவினங்கள் அளவு குறையும் என முன்கூட்டியே அறிந்து செலவுகளைக் குறைந்து நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் வளர்ச்சி பாதையை உறுதி செய்யப் பணிநீக்க நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது.

 இந்தியா, அமெரிக்கா, சீனா

இந்தியா, அமெரிக்கா, சீனா

இந்த நிலையில் இந்தியா, அமெரிக்கா, சீனா என வித்தியாசம் இல்லாமல் அனைத்து நாடுகளிலும் பணிநீக்கம் நிகழ்கிறது. குறிப்பாக அதிகச் செலவு செய்து வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் ஈர்க்கும் அனைத்து நிறுவனங்களும் 2023 ஆம் ஆண்டில் பணிநீக்க நடவடிக்கையை அறிவித்து வருகிறது.

24,000 பேர் பணிநீக்கம்

24,000 பேர் பணிநீக்கம்

2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் உலகளவில் சுமார் 91 நிறுவனங்கள் 24,000 க்கும் மேற்பட்ட டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன, இது டெக் துறைக்கு மிகவும் மோசமான நாட்களாகப் பார்க்கப்படுகிறது.

Layoffs.fyi நிறுவனம்

Layoffs.fyi நிறுவனம்

Layoffs.fyi நிறுவனம் உலகளவில் சேர்த்த தரவுகள் படி 2022 ஆம் ஆண்டில் 1,000 க்கும் மேற்பட்ட டெக் நிறுவனங்கள் 1.5 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தன. இந்த நிலையில் தற்போது ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் உலகளவில் சுமார் 91 நிறுவனங்கள் 24,000 க்கும் மேற்பட்ட டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன.

2022 டூ 2023

2022 டூ 2023

மெட்டா, அமேசான், ட்விட்டர், பெட்டர்.காம், அலிபாபா உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தன. 2023 ஆம் ஆண்டுப் பெரிய நிறுவனங்கள் பட்டியலில் அமேசான் பிள்ளையார் சுழியைப் போட்டு உள்ளது.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

உலகில் பிற நாடுகளை ஒப்பிடும் போது இந்திய நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட டெக் ஊழியர்கள் எண்ணிக்கை சற்றுக் குறைவு தான். சமூக ஊடக நிறுவனமான ஷேர்சாட் நிச்சயமற்ற சந்தை நிலைமைகள் காரணமாக அதன் பணியாளர்களில் 20 சதவீதத்தைப் பணிநீக்கம் செய்தது, 500 - 600 க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக ஜனவரி 16 ஆம் தேதி அறிவித்தது.

ஓலா, Skit.ai

ஓலா, Skit.ai

ஆன்லைன் டாக்சி மற்றும் எல்க்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான Ola 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததுள்ளது. வாய்ஸ் ஆட்டோமேட்டெட் ஸ்டார்ட்அப் நிறுவனமான Skit.ai போன்ற நிறுவனங்களும் 10 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

Dunzo பணிநீக்கம்

Dunzo பணிநீக்கம்

இந்தியாவின் முன்னணி குவிக் காமெர்ஸ் வர்த்தகச் சேவை நிறுவனமான Dunzo, செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் வேளையில் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 3 சதவீத பணியாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

அமேசான்

அமேசான்

உலகளாவிய ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகளவில் 18,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்த நிலையில் இந்தியாவில் கிட்டத்தட்ட 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tech companies layoff 1600 tech employees daily in 2023

Tech companies layoff 1600 tech employees daily in 2023
Story first published: Tuesday, January 17, 2023, 21:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X