ஹெல்த்கேர் துறைக்குள் நுழையும் ஆரக்கிள்.. 28.3 பில்வியன் டாலர் டீல்..!

உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஆரக்கிள் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யக் குறிப்பாகக் கொரோனாவுக்குப் பின்பு உலக நாடுகளில் ஹெல்த்கேர் பிரிவில் அதிகப்படியான முதலீடுகளைச் செய்ய அரசும், மக்களும் முடிவு செய்துள்ள நிலையில் இத்துறையில் இறங்க ஆரக்கிள் முடிவு செய்துள்ளது.

ஆரக்கிள் டெக் சேவை நிறுவனம் என்பதால் ஹெத்கேர் துறையில் டிஜிட்டல் முறையில் மக்கள் அல்லது நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை நிர்வாகம் செய்யும் நிறுவனத்தைக் கைப்பற்றி ஹெல்த்கேர் துறைக்குள் நுழைந்துள்ளது.

ஆரக்கிள் நிறுவனம்

ஆரக்கிள் நிறுவனம்

ஆரக்கிள் நிறுவனம் மெடிக்கல் ரெக்கார்டு சிஸ்டம்ஸ் சேவையை அளிக்கும் செர்னர் கார்ப் (Cerner Corp.) நிறுவனத்தைச் சுமார் 28.3 பில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் ஆரக்கிள் நிறுவனத்திற்கு ஹெல்த்கேர் பிரிவில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைப் பெற உள்ளது, இதன் மூலம் ஆரக்கிள் தனது கிளவுட் கம்பியூட்டிங் மற்றும் டேட்டா பேஸ் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியும்.

செர்னர் நிறுவனம்

செர்னர் நிறுவனம்

ஆரக்கிள் நிறுவனம் செர்னர் நிறுவனத்தை மொத்தமாகப் பணமாகக் கொடுத்து வாங்க உள்ளதாக அறிவித்துள்ளதால், செர்னர் நிறுவனத்தின் ஒரு பங்கிற்குச் சுமார் 95 டாலர் கொடுத்து வாங்க உள்ளது. இது சந்தை விலையை விடவும் 20 சதவீதம் கூடுதலான விலை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரக்கிள் நிறுவனர் லேரி எலிசன்

ஆரக்கிள் நிறுவனர் லேரி எலிசன்

ஆரக்கிள் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்ட காரணத்தால் இந்நிறுவன பங்குகள் மட்டும் அல்லாமல் ஆரக்கிள் நிறுவனர் லேரி எலிசன் சொத்து மதிப்பும் உயர்ந்தது. ஆனால் ஆரக்கிள் மற்றும் செர்னர் நிறுவனத்தின் கைப்பற்றல் செய்தி வெளியானதும் ஆரக்கிள் பங்கு மதிப்பு 2 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

ஹெல்த்கேர் பிரிவு வர்த்தகம்

ஹெல்த்கேர் பிரிவு வர்த்தகம்

செர்னர் நிறுவன கைப்பற்றல் மூலம் ஆரக்கிள் நிறுவனத்தின் ஹெல்த்கேர் பிரிவு வர்த்தகம் மட்டும் வருகிற 2023ஆம் ஆண்டுக்குள் 15.8 பில்லியன் டாலர் அளவீட்டை எட்டும் எனச் சந்தை கணிப்புகள் கூறுகிறது. இதற்கு முக்கியக் காரணம் செர்னர் நிறுவனத்தில் ஏற்கனவே இருக்கும் பல நூறு வாடிக்கையாளர் தான்.

கூகுள் ஹெல்த் டேவிட் ஃபைன்பெர்க்

கூகுள் ஹெல்த் டேவிட் ஃபைன்பெர்க்

கூகுள் ஹெல்த் பிரிவில் துணைத் தலைவரான டேவிட் ஃபைன்பெர்க், அக்டோபர் 1ஆம் தேதி தான் செர்னர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். தற்போது ஆரக்கிள் கைப்பற்றியதன் மூலம் செர்னர் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+