AI கருவிகள் இலவசம்.. கோடிக்கணக்கான இந்தியர்களை குறிவைக்கும் ஏர்டெல், ஜியோ.. வெளியான ஷாக்கிங் தகவல்.!

பிரபல சாட்ஜிபிடி (ChatGPT) நிறுவனம், அவர்களுடைய புதிய, விலை குறைவான "கோ" (Go) AI சாட்பாட்டை ஒரு முழு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ள கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. இதுமட்டுமல்ல, கூகுள் மற்றும் பெர்ஃப்ளெக்சிட்டி AI போன்ற பெரிய நிறுவனங்களும் இதே போல சலுகைகளை அறிவித்துள்ளன.

பெர்ஃப்ளெக்சிட்டி AI நம் ஊரில் உள்ள ஏர்டெல் நிறுவனத்துடனும், கூகுள் மிகப் பெரிய தொலைபேசி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவுடனும் கைகோர்த்துள்ளன. இவர்கள் அனைவரும், நாம் மாதாந்திர டேட்டா வாங்கும்போதே, இந்த AI கருவிகளை இலவசமாகவோ அல்லது மிக குறைந்த விலைக்கோ கொடுப்பார்கள்.

AI கருவிகள் இலவசம்.. கோடிக்கணக்கான இந்தியர்களை குறிவைக்கும் ஏர்டெல், ஜியோ.. வெளியான ஷாக்கிங் தகவல்.!

இலவசம் ஒரு தந்திரம் : இந்த இலவச சலுகைகளை, அந்த நிறுவனங்களின் நல்ல மனது என்று மட்டும் நினைத்துவிடக் கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது ஒரு பெரிய வியாபாரத் திட்டம் ஆகும். "பணம் கேட்கும் முன், இந்திய மக்களை இந்த AI கருவிகளைப் பயன்படுத்தப் பழகிப் போக செய்ய வேண்டும். பிறகு அவர்களால் இதைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது" என்பதே இந்த நிறுவனங்களின் திட்டம் என்று ஆய்வாளர் தருண் பதக் கூறியுள்ளார்.

இந்த நிறுவனங்கள் இந்தியாவை தேர்ந்தெடுக்க காரணம், இங்குள்ள மக்கள் தொகை அதிகம் மற்றும் இணையத்தை பயன்படுத்துபவர்களில் இளைஞர்கள் அதிகம் இருப்பதுதான். சீனா போன்ற நாடுகளில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் எல்லோரும் வந்து வியாபாரம் செய்ய வசதியான ஒரு திறந்த சந்தை உள்ளது. அதனால், இந்திய மக்களை தங்கள் புதிய AI ரோபோக்களுக்கு பயிற்சி அளிக்க இந்த நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

இந்தியாவில் 90 கோடிக்கும் அதிகமானோர் இணையம் பயன்படுத்துகிறார்கள். மேலும், இங்கு டேட்டா விலை மிகவும் மலிவு. இணையம் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். இவர்கள் நாள் முழுவதும் ஸ்மார்ட்போனில் வேலை செய்கிறார்கள், படிக்கிறார்கள், நண்பர்களுடன் பேசுகிறார்கள்.

இந்த AI கருவிகளை டேட்டா பேக்குகளுடன் கொடுக்கும்போது, இந்தியர்கள் அதைப் பயன்படுத்தும் அளவு அதிகமாகிறது. நாம் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோமோ, அவ்வளவு அதிகமாக புதிய தகவல்கள் (Data) அந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும். "இந்திய மக்களின் வித்தியாசமான தேவைகள் மற்றும் கேள்விகள் மூலம் கிடைக்கும் இந்தத் தரவுகள், உலகிலுள்ள மற்ற AI ரோபோக்களை விட தங்கள் ரோபோவை சிறப்பாகவும் புத்திசாலியாகவும் மாற்ற உதவும்" என்று ஆய்வாளர் கூறுகிறார்.

கவனிக்க வேண்டிய விஷயம் : இந்த இலவச சலுகைகள் AI நிறுவனங்களுக்கு நல்ல லாபத்தை தரும் என்றாலும், நம்முடைய தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு (Data Privacy) குறித்து நாம் கவலைப்பட வேண்டும். "இலவசமாக கிடைக்கிறது அல்லது மிகவும் சுலபமாக இருக்கிறது என்பதால், மக்கள் தங்கள் தகவல்களை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்" என்று தொழில்நுட்ப எழுத்தாளர் பிரசந்தோ கே ராய் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தத் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க, அரசு இதில் தலையிட்டு, கண்டிப்பான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். தற்போது, இந்த AI கருவிகளை கட்டுப்படுத்த இந்தியாவில் தனி சட்டம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் குறைந்த விலைக்கு டேட்டா கொடுத்து, கோடிக்கணக்கான இந்தியர்களை இணையத்தை பயன்படுத்தப் பழக்கியது போல, இப்போது இந்த இலவச AI சலுகைகள் மூலம் மக்களை இந்த தொழில்நுட்பத்திற்கு பழக்கப்படுத்தி, பிறகு அதில் 5% பேர் மட்டும் பணம் கொடுத்து சந்தா செலுத்தினால் கூட, அது அந்த நிறுவனங்களுக்குப் பெரிய லாபத்தை தரும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+