IT தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் 2024-ஆம் ஆண்டின் 2-ஆம் பாதியிலும் தொடர்ந்துள்ளன. பல உயர்மட்ட நிறுவனங்கள் தங்கள் மறுசீரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக பணிநீக்கங்களை செயல்படுத்தி வருகின்றன. பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று IBM. இது சமீபத்தில் இரண்டாவது சுற்று பணிநீக்கங்களை அறிவித்தது. இதன் மூலம் சீனியர் ப்ரோக்ராமர்கள், சேல்ஸ் ஸ்டாப், சப்போர்ட் டீம் மெம்பர்கள் போன்றவர்களைக் குறி வைத்து இந்தப் பணி நீக்கங்கள் உள்ளது. IBM தனது உலகளாவிய நிறுவனங்களின் பணியாளர்களில் ஒரு சதவீதத்தை குறைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக உலகளாவிய டெக் துறையில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் செயல்படும் ஹெல்த்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான Dozee, அதன் நஷ்டத்தை சமாளிக்க சமீபத்தில் சுமார் 40 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதேபோல், WeTransfer, லாபம் ஈட்டும் உத்தியின் ஒரு பகுதியாக அதன் பணியாளர்களை 75% குறைத்து கடுமையான பணிநீக்கத்தை அறிவித்தது.

சிஸ்கோ நிறுவனம்: தொழில்நுட்பத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் சிஸ்கோ நிறுவனம், ஆகஸ்ட் 2024-இல் மற்றொரு சுற்று பணிநீக்கங்களை அறிவித்தது. இது தோராயமாக 5,600 ஊழியர்களைப் பாதிக்கும் 7 சதவீத பணிநீக்கங்களாகும். இந்த அறிவிப்பு பிப்ரவரியில் முந்தைய பணிநீக்கங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டது. பிப்ரவரியில் 4,000 வேலை இழப்புகள் ஏற்பட்டது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம்: மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் பணிநீக்கம் செய்யும் நிறுவனங்களின் வரிசையில் இணைந்துள்ளது. அதன் எக்ஸ்பாக்ஸ் டிவிஷனில் 650 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
குவால்காம் மற்றும் டெல் உள்ளிட்ட பிற குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப நிறுவனங்களும் பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. குவால்காம் சான் டியாகோவில் 226 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. இதற்கு முன்பு 1,250 தொழிலாளர்களை குறைத்துள்ளது. இதற்கிடையில், டெல் டெக்னாலஜிஸ் 2024-ஆம் ஆண்டில் தனது பணியாளர்களைக் குறைப்பதைத் தொடரும் என்று தெரிவித்துள்ளது.
பணி நீக்கங்கள் தொடர்ந்து நடந்தாலும் இந்த 2025-ஆம் ஆண்டில் என்ட்ரி லெவல் ஜாப்களுக்கு 2024-ஆம் ஆண்டை விட 1,50,000 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஸ்டாஃபிங் நிறுவனமான CIEL HR-இன் MD & CEO ஆதித்ய நாராயண மிஸ்ரா, புதிய பணியமர்தலுக்கான தேவை கடந்த ஆண்டின் இதே காலத்தை விட FY25-இன் இரண்டாம் பாதியில் 10 முதல் 15% அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுமொத்தமாக, தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் அதிகரித்திருக்கும் போது, ஐடி சேவைத் துறையில் புதிய பணியமர்த்தலில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications