இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் இருக்கும் அனைத்து ஊழியர்களும் செயற்கை நுண்ணறிவை கண்டு அஞ்சி நடுங்கத்தான் செய்திகிறது, இந்த பயத்தால் பலர் வேலையை எப்படியாவது காப்பாத்திக்க வேண்டும் என்பதை தாண்டி, செயற்கை நுண்ணறிவை வெல்ல வேண்டும் என்ற வெறி மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது இதனாலேயே பலர் புதிய புதிய தொழில்நுட்படத்தை கற்க துவங்கியுள்ளனர்.
இப்படியிருக்கையில் AI மூலம் ஐடி சேவை துறைக்கும், டெக் ஊழியர்களுக்கும் எவ்விதமான பாதிப்பு இப்போது இல்லை என கூறப்பட்டாலும், AI வந்த பின்பு தற்போது 20 பேர் செய்யும் வேலையை வெறும் 7-8 பேர் மிகவும் எளிதாக செய்து முடித்திடுவார்கள். ஆனால் AI தொட முடியாத 7 டெக் வேலைவாய்ப்புகள் பட்டியலிடப்பட்டு உள்ளது.

இந்த 7 வேலைவாய்ப்புகளையும் இன்றைய AI துறை வளர்ச்சி, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு உள்ளது. அடுத்த 10 -15 வருடத்தில் டெஸ்லா ஆப்டிமஸ் ரோபோ உடன் AI இணைந்து மனிதர்களை காட்டிலும் ரோபோக்கள் உயர்ந்தாலும் வியப்படைய ஒன்றும் இல்லை.
இதனால் தற்போதைய நிலையில் AI பாதிக்காதா 5 டெக் வேலைவாய்ப்புகளை பார்ப்போம். மேலும் இந்த 7 வேலைவாய்ப்புகளில் AI மூலம் இயங்கும் டூல்ஸ் பல வரலாம், ஆனால் மனிதர்களின் உதவி இல்லாமல் இயங்க முடியாது என்பதை மையக்கருத்தாக வைத்து பட்டியலிடப்பட்டு உள்ளது.
சைபர்செக்யூரிட்டி : கிரெடிட் கார்டு முதல் டெக் சேவைகள் வரையில் தகவல் திருட்டுகள் அதிகரித்திருக்கும் வேளையில் சைபர்செக்யூரிட்டி ஊழியர்களுக்கு பெரிய அளவிலான டிமாண்டு இருப்பது மட்டும் அல்லாமல் அதிகப்படியான சம்பளமும் கொடுக்கப்படுகிறது. இப்படியிருக்கையில் சைபர்செக்யூரிட்டி சார்ந்து AI Tools எத்தனை வந்தாலும் மனிதர்களின் ஈடுப்பாடு இல்லாமல் இப்பிரிவும், இப்பிரிவு ஊழியர்களும் இயங்க முடியாது. அந்த வகையில் சைபர்செக்யூரிட்டி AI-resistant துறையாக விளங்குகிறது.
UI/UX design: மக்களை கவரும் வகையில் ஒரு ப்ராடெக்ட்டின் அடிப்படையை உணர்த்தும் வகையில் டிசைன் செய்வது க்ரியேட்டிவ் பணியாகும். இது கிட்டதட்ட தத்ரூபமாக ஒரு ஓவியர் ஓவியம் வரைவது போன்றது. மக்களின் எண்ணம், யோசனை, பயன்பாட்டு முறை ஆகியவற்றை வைத்து க்ரியேட்டிவ் டிசைன் செய்வதில் AI நுழைய முடியாது.
சாப்ட்வேர் டிசைன் : மக்களின் தேவையை அறிந்து தொழில்நுட்ப அளவில் முக்கியமான தேர்வுகளை செய்யும் சாப்ட்வேர் சிஸ்டம் டிசைனிங்-ல் AI நுழைவது கடினம், அப்படி நுழைந்தாலும் சாதகமான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
டேட்டா சயின்டிஸ்ட் : தரவுகளை ஆய்வு செய்வது, முடிவுகளை திருத்துவது போன்றவற்றில் கட்டாயம் AI பங்கீடு இருந்தாலும் சில முக்கிய டேட்டா சோதனைகள், டேட்டா அடிப்படையிலான முடிவுகள், தீர்வுகள், திட்டமிடல் ஆகியவை கட்டாயம் மனிதர்கள் ஈடுப்படு இல்லாமல் செய்ய முடியாது.
எல்லாவற்றும் மேலாக நெறிமுறை மற்றும் நியாயமான முடிவுகள் எடுக்க வேண்டிய அனைத்து இடத்திலும் AI பங்கீடு இருக்க வாய்ப்புகள் குறைவு. இது ஐடி சேவை நிறுவனத்தின் HR பிரிவில் இருந்து CSR பிரிவு வரையில் பொருந்தும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications