மீண்டும் பணிநீக்கம்.. சாட்டை சுழற்றும் அமெரிக்க நிறுவனங்கள்.. இந்திய ஊழியர்களுக்கு குறியா..?

அமெரிக்கா முதல் இந்தியா வரையில் பொருளாதாரமும், வர்த்தகமும் வளர்ச்சி பாதையில் இருக்கும் வேளையிலும், நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளை சந்தித்து வருகின்றது. இதனால் செலவுகளை கட்டாயம் குறைக்க வேண்டிய இக்காட்டான நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு மூலம் ஒவ்வொரு நிறுவனத்தின் செலவுகளையும் அதிகரித்து வருகிறது, இதற்கான நிதியை திரட்டவும், புதிய வர்த்தகத்தில் அதாவது இன்றைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் புதிய வர்த்தக பிரிவில் இறங்க வேண்டிய கட்டாயமும் உருவாகியுள்ளதால் இதற்கான முதலீட்டை திரட்ட சரிவர இயங்காத பிரிவுகளை முடிவிட்டு அந்த முதலீட்டை புதிய வர்த்தகத்திற்கு மாற்றி வருகிறது.

மீண்டும் பணிநீக்கம்.. சாட்டை சுழற்றும் அமெரிக்க நிறுவனங்கள்.. இந்திய ஊழியர்களுக்கு குறியா..?

இவை அனைத்திலும் ஊழியர்கள் பணிநீக்கம் என்பது பொதுவான விஷயமாக மாறி வருவதால், பணிநீக்கம் சீசன் மீண்டும் உருவாகியுள்ளது. ஏற்கனவே ஆரக்கிள் இந்தியாவில் 3000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் மைக்ரோசாப்ட் இந்தியாவில் 400-500 ஊழியர்களை PIP பிரிவில் போட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவை இரண்டுமே டெக் துறையில் பெரிய ஜாம்பவான்கள் என்பதால் டெக் ஊழியர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்தது. இந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் பேமெண்ட் நிறுவனமான பேபால் மற்றும் உபர் ஆகிய நிறுவனங்களும் பணிநீக்கம் என்ற சாட்டையை கையில் எடுத்துள்ளது.

அமெரிக்காவின் முன்னணி பின்டெக் நிறுவனமாக இருக்கும் பேபால் நிறுவனம் செலவுகளை குறைக்கவும் விதமாக தனது ஊழியர்கள் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் பணியாற்றும் 6000 ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் ஊழியர்கள் அதாவது 600 ஊழியர்களை பணிநிக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேபால் இந்தியாவில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் என பல நகரங்களில் தனது அலுவலகத்தை வைத்திருக்கிறது. பேபால் ஆகஸ்ட் மாதம் செய்த இந்த பணிநீக்க நடவடிக்கையில் 220 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல் அயர்லாந்து நாட்டிலும் 164 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

அடுத்தாக உலகின் முன்னணி ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனமாக இருக்கும் உபர் தனது மொத்த ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகளவில் 3300 ஊழியர்களை பணியில் இருந்கு நீக்கப்படலாம் என தெரிகிறது. இந்த பணிநீக்கத்தில் உபர் எடுத்துள்ள முடிவு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

காரணம் இந்த முறை பணிநீக்கத்தில் அதிகளவிலான ஊழியர்கள் நிர்வாக பிரிவில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உபர் நிறுவனத்தின் நிர்வாக பிரிவில் சுமார் 20 சதவீத ஊழியர்கள் இந்த சுற்றில் பணிநீக்கம் செய்யப்படலாம் என தெரிய வந்துள்ளது.

இதேபோல் பல மேனேஜர்கள் பதவிகள் தனிநபர் பணியாக மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிநீக்கம் மூலம் சேமிக்கப்படும் நிதியை நிறுவனத்தின் ரோபோடாக்சி, டெலிவரி, ரைட்ஷேரிங் போன்ற சேவையில் முதலீடு செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிநீக்கத்தால் இந்தியாவிலும் பாதிப்பு எற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்தியாவில் தற்போது ஜிசிசி நிறுவனங்களில் அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கத்தை எதிர்கொண்டு வருகிறது, டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. ஏஐ வந்தது மூலம் பலகட்ட பணிகளை ஆட்டோமேஷன் செய்யப்பட்டு வரும் காரணத்தால் மனித ஊழியர்களின் தேவை என்பது அனைத்து துறையிலும் குறைந்து வரும் வேளையில் ஐசிசி துறையில் முதற்கட்ட பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+