2025 ஆம் ஆண்டின் இறுதிக்கு வந்துவிட்டோம், இந்த வருடம் பல மாற்றங்களை பர்சனலாகவும், சமூகமாகவும் நாம் பார்த்திருப்போம். ஆனால் அதிகப்படியானோரை பாதித்த ஒரு விஷயம் என்றால் தொழில்நுட்பத் துறையில் நடந்த வேலைவாய்ப்பு இழப்பு தான். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். உதாரணமாக டெக் துறையில் ஏற்பட்ட பணிநீக்கம் காரணமாக பெரு நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை மோசமான வர்த்தக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இப்படி பல துறைகள் டெக் துறையில் பணிநீக்கம் மூலம் இந்த வருடம் பாதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின்பு நடந்த பெரிய பணிநீக்க அலை ஓய்ந்து முடிந்தது என நினைத்த பலருக்கு ஏஐ மூலம் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. டெக் நிறுவனங்கள் ஏஐ துறையில் முதலீடு செய்ய பணத்தை மிச்சப்படுத்தவும், ஏஐ மூலம் ஊழியர்களின் பணிகளை மேம்படுத்த முடிவு செய்தது, ஏஐ மூலம் 10 பேர் செய்யும் பணிகளை 2-3 பேரை வைத்து இயக்க முடியும் கட்டமைப்பு உருவாக்கியது என பல விஷயங்கள் இந்த ஆண்டு நடந்தது. இதன் விளைவு அடுத்தடுத்து பணிநீக்கம்.

Layoffs.Fyi தளத்தின் தரவுகளின்படி உலகம் முழுவதும் 551 நிறுவனங்களில் 1,22,549க்கும் மேற்பட்ட டெக் ஊழியர்கள் இந்த ஆண்டு தங்களுடைய வேலையை இழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பெரிய நிறுவனங்கள் செலவு குறைப்பு மற்றும் ஏஐ ஒருங்கிணைப்புக்காக பணிநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளன.
மைக்ரோசாப்ட் டாப்பு
இதேபோல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஆண்டில் பல முறை சிறு சிறு பணிநீக்க நடவடிக்கையாக சுமார் 15,000 பேரை பணியில் இருந்து நீக்கியது. இதில் ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 9,000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
அமேசான்
அமேசான் நிறுவனம் அக்டோபர் மாதம் 14,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததது, இது நிறுவன வரலாற்றிலேயே மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கையாகும். ஏஐ உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு முதலீடு அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ்
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது ஊழியர்களில் 2 சதவீதத்தை குறைத்தது. இது சுமார் 12,000 பேரை பணிநீக்கம் செய்தது. இந்த பணிநீக்கத்திற்கு பின்பு டிசிஎஸ் 2 நிறுவனங்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ்-ன் பணிநீக்கத்திற்கு ஏஐ காரணமாக அல்ல, ஊழியர்களின் திறன் தற்போதைய டிசிஎஸ் திட்டத்திற்கு பொருந்தாமல் இருப்பதாலும், வணிக மாற்றம் காரணமாக இது நடந்ததாக தெரிவித்தது.
பிற முக்கிய நிறுவனங்கள்
- சிப் உற்பத்தி நிறுவனமான இன்டெல் ஜூலை வரை 15 சதவீத ஊழியர்களை குறைத்தது.
- சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் பெனியாஃப் செப்டம்பர் மாதம் ஏஐ உதவியுடன் 4,000 வாடிக்கையாளர் சேவை வேலைகளை குறைத்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
- லேப்டாப் மற்றும் கம்பியூட்டர் உற்பத்தி நிறுவனமான எச்பி 2028 நிதியாண்டு வரை 4,000 முதல் 6,000 வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.
- ஆப்பிள் அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான சேல்ஸ்பிரிவு ஊழியர்களை குறைத்தது.
- மெட்டாவின் இன்ஸ்டாகிராம் ஏஐ பிரிவில் 600 ஊழியர்களை குறைக்க திட்டமிட்டது.
- கூகுள் டிசைன் பிரிவில் 100 பேரை பணியில் இருந்து நீக்கியது.
- ஜெர்மன் நிறுவனமான சீமென்ஸ் மார்ச் மாதம் டிஜிட்டல் இண்டஸ்ட்ரீஸ் பிரிவில் 5,600 வேலைகளை குறைத்தது.
- நவம்பர் மாதம் அமெரிக்க டெலிகாம் நிறுவனமான வெரிசான் 13,000க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications