சென்னை: டெக் துறையில் பணி நீக்கங்கள் தொடரும் என்பது போல் தெரிகிறது. ஏனெனில் தொடர்ந்து பல முன்னணி IT நிறுவனங்களும் பணிநீக்கங்களை அறிவித்த வண்ணம் உள்ளன. ஏப்ரல் மாதத்தில் 21,473 பேர் வேலை இழந்த நிலையில், மே மாதத்தில் பணி நீக்கங்கள் சற்று குறைந்திருந்தன. மே மாதத்தில் 9,742 பேர் வேலை இழந்தனர். ஆனால், ஜூன் மாதத்தின் துவக்கத்திலிருந்தே 1400க்கும் மேற்பட்டோர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.
கூகுள், மைக்ரோசாப்ட், ஓர்காம் மற்றும் ஒடா போன்ற நிறுவனங்கள் என சுமார் 1410 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் மிகப்பெரிய அளவிலான பணி நீக்க அறிவிப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து வந்தது. HoloLens 2 மற்றும்Azure Moonshots இல் பணிபுரியும் ஊழியர்களில் சுமார் 1000 பேரை பணி நீக்கம் செய்வதாக மைக்ரோசாப்ட் அறிவித்தது.

ஜூன் மாத முதல் வாரத்தில், 7 IT தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிநீக்கங்களை அறிவித்தன. ஜூன் 1 முதல் ஜூன் 6 வரை தங்கள் பணியாளர்களைக் குறைத்த நிறுவனங்களைப் பற்றிப் பார்ப்போம்.
மைக்ரோசாப்ட் நிறுவனம்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 1000-திற்க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. திங்கட்கிழமை, மைக்ரோசாப்ட் தனது புதிய பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டது. இது சுமார் 1,000 ஊழியர்களை பாதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பணி நீக்கம் ஹாலோலென்ஸ் 2 மற்றும் ஆபரேட்டர்ஸ் மற்றும் மிஷன் எஞ்சினியரிங் (Operators and Mission Engineering) போன்ற துறைகளிலும் பணிபுரிந்து வந்தவர்களை பாதித்துள்ளது.
மைக்ரோசாப்ட்டின் இந்தப் பிரிவுகளில் தற்போது நடைபெற்று வரும் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பணி நீக்கங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு வருடத்திற்கு முன்பு சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதற்குப் பிறகு சமீபத்திய, இந்த பணிநீக்கத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூகுள் நிறுவனம்: கூகுள் தனது கிளவுட் யூனிட்டின் (cloud unit) விற்பனை மற்றும் பொறியியல் குழுக்கள் உட்பட பல குழுக்களில் இருந்து தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸை விரைவாக வேலை செய்வதற்கு பயன்படுத்துவதற்காக, இந்த பணி நீக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கிளவுட் என்பது கூகுளின் மிக வேகமாக வளர்ச்சி அடையும் வணிகங்களில் ஒன்றாக உள்ளது.
CNBC அறிக்கை-இன் படி கூகுள், கடந்த வாரமே, இந்தக் கிளவுட் யூனிட்டின் பணி நீக்கங்கள் குறித்து அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 100 பேர் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Oda, Pagaya மற்றும் Orcam: இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து 350 பணி நீக்கங்களைச் செய்துள்ளன. இஸ்ரேலை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான OrCam, அதன் மார்க்கெட்டிங் பிரிவில் இருந்து 100 பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் தனது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது இது இரண்டாவது முறையாகும். இந்நிறுவனம் பிப்ரவரியிலும் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
மறுபுறம், நார்வே-வை தளமாகக் கொண்ட ஆன்லைன் ஸ்டார்ட்அப் நிறுவனமான Oda 150 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. மற்றொரு இஸ்ரேலிய நிறுவனமான Pagaya, இஸ்ரேலில் உள்ள 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. பணிநீக்கம் அனைத்து துறைகளிலும் உள்ள ஊழியர்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிறுவனம் 540 பணியாளர்களைக் கொண்டுள்ளது, அதில் 400 பேர் இஸ்ரேலில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications