கணினி மற்றும் பிரிண்டர் நிறுவனமான ஹெச்பி இன்க் இஸ்ரேலில் 100 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டதாக அறிவித்திருந்தது. இதற்கிடையில் தற்போது உலகம் முழுக்க 3000 - 6000 பேர் வரையில் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த பணி நீக்கமானது பல துறைகளிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்த பணி நீக்க நடவடிக்கையானது மார்கெட்டிங் துறை மற்றும் விற்பனை பிரிவில் இருக்கலாம் என தெரிகிறது.
பணி நீக்க திட்டம்
ஹெச்பி நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் 6000 பேர் வரையில் பணி நீக்கம் செய்ய திட்டமிட்ட நிலையில், இது உலகம் முழுக்க 2025-க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இது அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 7 - 11% பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த பணி நீக்கம் என்பது "Future Ready Transformation Plan" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
செலவு குறைப்பு நடவடிக்கை
இது ஹெச்பி நிறுவனம் 2025க்குள் குறைந்தபட்சம் 1.4 பில்லியன் டாலர் செலவு குறைப்பினை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மறுசீரமைப்பு மற்றும் செலவினங்கள் 1 பில்லியன் டாலராகவும் மதிப்பிட்டுள்ளது.
சவால்களுக்கு ஏற்ப வளர்ச்சி
இஸ்ரேலில் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதற்கான முடிவு, தற்போதைய சந்தை சவால்களுக்கு ஏற்ப வளர்ச்சி முன்னுரிமைகளில் மறு முதலீடு செய்யும் திறனை உருவாக்குகிறது என்று ஹெச் பி தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அதன் நீண்டகால வளர்ச்சியினை ஊக்குவிக்கும் விதமாக ஹெச் பி-யின் இந்த நடவடிக்கையானது வந்துள்ளது.
வளர்ச்சியினை தக்க வைக்க நடவடிக்கை
ஹெச்.பி தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி வாடிக்கையாளர் மதிப்பை உருவாக்கி வருகிறது. இந்த காலகட்டத்தில் அதன் வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. வாடிக்கையாளர்களின் நன்மதிப்பினை பெற்ற நிறுவனம் என்ற நிலையில், வேலை நீக்க நடவடிக்கையை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பணிநீக்க நடவடிக்கை
அதிநவீன தொழில்நுட்ப சந்தையில் டிஜிட்டல் பயன்பாடு என்பது கணிசமாக அதிகரித்து வருகின்றது. ஹெச் பி நிறுவனம் கவனம் செலுத்தி வருகின்றது.
டெக் துறையில் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகின்றது. இதில் டெக் ஜாம்பவான்கள் ஆன கூகுள் தொடங்கி மைக்ரோசாப்ட் வரையில் பல்வேறு நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வருகின்றன. இது துரதிஷ்டவசமானது.


Click it and Unblock the Notifications