சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில், டெக் நிறுவனங்கள் பலவும் பணி நீக்கம் செய்து வருகின்றன.
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் சமீபத்தில், அதன் செலவு குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 11,000 பேரை பணி நீக்கம் செய்தது. இது தற்போது மீண்டும் ஒரு பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரண்டாவது ரவுண்ட்
இம்மாத தொடக்கத்தில் மெட்டா நிறுவனம் செலவு விகிதம் 89 - 95 பில்லியன் டாலர் ஆக எதிர்பார்த்த நிலையில், தற்போது மீண்டுமொரு பணி நீக்கம் வரலாம் என தெரிகின்றது. இந்த பணி நீக்கமானது மெட்டா நிறுவனமானது 13% அல்லது 11,000 பேரை பணி நீக்கம் செய்த பிறகு வந்துள்ளது.
அதிகளவிலான ஊழியர்கள் பணியமர்த்தல்
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா பணி நீக்கம் செய்த நிலையில், இது குறித்து அதன் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் அப்போதும் விளக்கம் அளித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றால் தேவை என்பது அதிகளவில் இருந்தது. இதன் காரணமாக அப்போது பெரும் அளவிலான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
வருவாய் வீழ்ச்சி
ஆனால் கொரோனாவுக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. இதன் காரணமாக விளம்பர வருவாயும் வீழ்ச்சி கண்டது. இதனால் நிறுவனத்தின் வருவாயும் வீழ்ச்சியினை கண்டது. ஆக நிறுவனம் செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பணி நீக்கத்தினை கையில் எடுத்துள்ளது.
ரெசசனுக்குள் நுழையலாம்
மெட்டா நிறுவனம் மட்டும் அல்ல, இந்த காலகட்டத்தில் கூகுள், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளன. இது சர்வதேச பொருளாதாரம் என்பது மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், ரெசசனுக்குள் நுழையலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
இனியும் அதிகரிக்கலாம்
ஆக தற்போது நிலவி வரும் இந்த நிலையின் மத்தியில் அமேசான் நிறுவனமும் தனது பணி நீக்க நடவடிக்கையினை 10000ல் இருந்து, இந்த ஆண்டு 18,000 ஆக அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனமும் இந்த ஆண்டினை மிகப்பெரிய பணி நீக்கத்தினையே செய்துள்ளது.
ஐடி துறையில் தாக்கம்
ஆக இத்தகைய சூழலுக்கு மத்தியில் தான் மெட்டா நிறுவனத்தின் மீண்டும் ஒரு பணி நீக்கம் என்பது பெரியளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐடி துறையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இருந்து வருகின்றது. இந்த போக்கு இன்னும் நீடிக்கலாமோ என்ற அச்சத்தின் மத்தியில், இது மேற்கொண்டு ஐடி துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்கள் மத்தியில் கவலை
மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான இந்த நிறுவனத்தில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பணிநீக்கம் இதுவாகும். சுமார் 11,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்த நிலையில், அந்த சமயத்தில் புதிதாக முழுநேர பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பணி நியமனத்தையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அப்படி இருந்தும் கூட இரண்டாவது கட்ட பணி நீக்கத்திற்கும் நிறுவனம் தயாராகி வருவது ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலை அளிக்கும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications