சென்னை: IT துறையில் நிலவி வரும் பொருளாதார சவால்கள் காரணமாக பணி நீக்கங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த மே மாதத்தில் மட்டும், 39 நிறுவனங்களில் 9,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, IT துறையில் பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 50 நிறுவனங்கள் 21,473 ஊழியர்களை முக்கிய IT நிறுவனங்கள் பணி நீக்கம் செய்த நிலையில், மே மாதத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. மே மாதத்தில் 39 நிறுவனங்கள் மொத்தம் 9,742 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, "layoffs.fyi" என்ற அறிக்கையை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. layoffs.fyi என்பது பணிநீக்கங்களை ட்ராக் செய்யும் இணையத்தளமாகும். இதன் மூலம், 2024ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரையில், 306 IT தொழில்நுட்ப நிறுவனங்களில், 89,333 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப துறையின் நிலவரம் சற்று கவலைக்கிடமானதாகவே உள்ளது. இதன் காரணமாக பல நிறுவனங்கள் தங்களின் செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகவே பணி நீக்கங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
எந்தெந்த நிறுவனங்கள் மே மாதத்தில் பணி நீக்கம் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.
கூகுள் நிறுவனம்: கூகுள் நிறுவனம் தனது மையக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பணி நீக்கங்கள் கலிபோர்னியாவின் சன்னிவேலில் உள்ள பொறியியல் துறை பணிகளை பாதித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணி நீக்க நடவடிக்கை, கடந்த ஆண்டு நிறுவனம் தனது ஊழியர்களில் 6 சதவீதத்தை குறைக்கும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Indeed நிறுவனம்: வேலை தேடல் இணையதளமான Indeed நிறுவனம், 2024ஆம் ஆண்டு மே மாதம் தனது ஊழியர்களில் கிட்டத்தட்ட 8 சதவீதத்தை பணி நீக்கம் செய்துள்ளது. இதில், பெரும்பாலானோர் அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இரண்டாம் கட்ட பணி நீக்கம் ரிசர்ச் மற்றும் டெவெலப்மென்ட் பிரிவுகளில் பணிபுரிபவர்களை பாதித்தது என்று அறிக்கை தெரிவிக்கிறது.
தோஷிபா (Toshiba) நிறுவனம்: தோஷிபா நிறுவனம், மறுசீரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக 4,000 உள்நாட்டு பணிகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆட்குறைப்பு நிறுவனத்தின் உள்ளூர் ஊழியர்களில் 6 சதவீதத்தை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பணி நீக்கங்களுக்கு கூடுதலாக, டோஷிபா தலைநகரான டோக்கியோவின் மையப்பகுதியில் உள்ள சில அலுவலக செயல்பாடுகளை, தலைநகரின் மேற்குப் பகுதியில் உள்ள கவாசாகி நகரத்திற்கு மாற்றுவதற்கும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டிக் டொக் (TikTok): பிரபல சோசியல் மீடியா தளமான TikTok நிறுவனம், உலகளவில் 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதில், நிறுவனத்தின் ஆப்ரேஷன் மற்றும் மார்க்கெட்டிங் டீம்களைச் சேர்ந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணங்களை TikTok நிறுவனம் தெரிவிக்காத போதிலும், தொழில் துறை பகுப்பாய்வாளர்கள் பல்வேறு காரணங்களை கணித்துள்ளனர். செலவுக் குறைப்பு நடவடிக்கையாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
வால்மார்ட் நிறுவனம்: சில்லறை வர்த்தக துறையின் முன்னணி நிறுவனமான வால்மார்ட், தனது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை சமீப காலமாக எடுத்து வருவதால், இந்த பணி நீக்கங்கள் நிறுவனத்தின் தலைமை அலுவலக ஊழியர்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணி நீக்கம் செய்யப்படும் அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்படும் ஊழியர்களின் துல்லியமான எண்ணிக்கை தெரியவில்லை.
மைக்ரோசாப்ட் நிறுவனம்: மே மாதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது கேமிங் பிரிவில் உள்ள ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. பாதிக்கப்பட்ட ஊழியர்களில் சிலர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள், மற்றவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த பணி நீக்கங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்த பணி குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
டெஸ்லா நிறுவனம்: எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம், IT, சேவை மற்றும் பொறியியல் துறைகளில் பணிபுரிந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. டெக்ஸாஸ் மற்றும் கலிபோர்னியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 6,700 க்கும் மேற்பட்ட ஊழியர்களை நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications