நாட்டின் முன்னணி ஐடி மற்றும் ஐடி சேவை நிறுவனமான டெக் மஹிந்திரா தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் விதமாகப் பார்மா துறையில் கன்சல்டன்சி மற்றும் லேபிளிங் ஆர்வொர்க் சேவைகளை அளிக்கும் பெரிகோர்டு என்னும் நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
இந்த நிறுவனப் பங்குகள் கைப்பற்றல் மூலம் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பார்மா, ஹெல்த்கேர், லைப் சைன்ஸ் பிரிவின் உலகளாவிய வர்த்தகம் பெரிய அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அயர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, இந்தியாவில் டெக் மஹிந்திரா நிறுவனத்திற்கு இருக்கும் மிகப்பெரிய பார்மா, ஹெல்த்கேர், லைப் சைன்ஸ் பிரிவு வர்த்தகத்தையும் சேவைகளையும் அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையிலும், நீண்ட கால அடிப்படையில் பெரிகோர்டு நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
70 சதவீத பங்குகளை எவ்வளவு தொகைக்கு வாங்கியது என டெக் மஹிந்திரா நிர்வாகம் தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை என்றாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் இன்று இந்நிறுவனம் அதிகளவிலான ஈர்ப்பைப் பெற்றுள்ளது.
இதன் எதிரொலியாக இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் டெக் மஹிந்திரா நிறுவனப் பங்குகளின் மதிப்பு 2.37 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் இன்றைய வர்த்தக முடிவில் ஒரு பங்கின் விலை 1,027 ரூபாய் வரையில் உயர்ந்தது.


Click it and Unblock the Notifications