இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், புதிய வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும் அமெரிக்கா-வை சேர்ந்து ஒரு நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது.
டெக் மஹிந்திரா
டெக் மஹிந்திரா நிறுவனம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆக்டிவஸ் கனெக்ட் என்னும் நிறுவனத்தைச் சுமார் 62 மில்லியன் டாலருக்கு மொத்தமாக அதாவது 100 சதவீத பங்குகளையும் கைப்பற்றியுள்ளது.
ஆக்டிவஸ் கனெக்ட் நிறுவனம்
62 மில்லியன் டாலர் கிட்டதட்ட 466 கோடி ரூபாய் மதிப்பில் டெக் மஹிந்திரா வாங்கிய ஆக்டிவஸ் கனெக்ட் நிறுவனம் வொர்க் அட் ஹோம் வாடிக்கையாளர் அனுபவ மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பெரிய அளவில் வர்த்தக விரிவாக்கத்தைச் செய்ய முடியும்.
CX போர்ட்போலியோ
ஆக்டிவஸ் கனெக்ட் நிறுவனத்தில் 1750 ஊழியர்களுடன் டிசம்பர் 2020 உடன் முடிந்த நிதியாண்டில் 17 மில்லியன் டாலர் வருமானத்தைப் பெற்றுள்ளது. ஆக்டிவஸ் கனெக்ட் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் வொர்க்பிளேஸ் சேவைகளைப் புதிதாக அளிக்க முடியும், இதேபோல் CX போர்ட்போலியோ சேவைகளை வலிமைப்படுத்த முடியும் என டெக் மஹிந்திரா தெரிவித்துள்ளது.
ஆக்டிவஸ் கனெக்ட் சேவைகள்
2018ல் துவங்கிய ஆக்டிவஸ் கனெக்ட் நிறுவனம் வாடிக்கையாளர் சேவையில் பலதரப்பட்ட சேவைகளை மிகவும் சிறப்பான முறையில் வழங்குகிறது. இந்த நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் டெக் மஹிந்திரா இனி பல மொழியில், பல வழியில் (chat, email, phone, text, video, மற்றும் social) வாடிக்கையாளர் சேவையை அளிக்க முடியும்.
6 மாத வர்த்தகம்
ஜூன் 30 உடன் முடிந்த 6 மாதத்தில் மட்டும் ஆக்டிவஸ் கனெக்ட் நிறுவனம் சுமார் 21.8 மில்லியன் டாலர் வருமானத்தைப் பெற்றுள்ளது. தற்போது மக்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் காரணத்தால் ஆக்டிவஸ் கனெக்ட் நிறுவனத்தின் சேவைகள் மிகவும் முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் விளங்குகிறது.
டெக் மஹிந்திரா பங்கு விலை
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை பெரிய அளவிலான சரிவைப் பதிவு செய்த காரணத்தால் டெக் மஹிந்திரா பங்குகளும் சரிந்தது. நேற்றைய வர்த்தக முடிவில் டெக் மஹிந்திரா பங்கு விலை 2.26 சதவீதம் சரிந்து 1592.90 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
More From GoodReturns

துப்பு கொடுத்தால் துட்டு.. ஈரான் தலைவர் முஜ்தபா கமேனி தலைக்கு மெகா பரிசு.. அமெரிக்கா அறிவிப்பால் ஷாக்..!

15 நாட்களில் 40% மேல் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை: ஈரான் போர் முடிவது தான் தீர்வா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?



Click it and Unblock the Notifications